பாடல் பட்டியல்
உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்
உலகின் குருவாய் பாரதம் ஆகிட
எங்கள் ஆருயிர் தாய்நாடே
எங்கள் மண்ணிது எங்கள் வானம்
எங்கும் சங்கம்தான் எதிலும் சங்கம்தான்
எத்தனை ஜன்மம் எடுத்தாலும் பாரத மண்ணிலேயே
எம் ஜன்ம பூமி தாயே எம் கர்ம பூமி நீயே
எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி
என்று காண்போம் எங்கள் சிந்துவை என்று உள்ளம் ஏங்குது
ஏகுவோம் ஏகுவோம் நாம் வீறுடன் இன்றே
ஒரே சிந்தனை
ஒண்ணுதான் ஒண்ணுதானே நம்ம நாடு தம்பி
ஒரு வரம் அருள் அன்னையே நீ
ஒருநாள் மாலைப் பொழுதினிலே உலவிவரும் நல் வேளையிலே
ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட
ஒன்றே தர்மம் பண்பாடொன்றே ஒன்றே நம்முயிர் நாடு
ஓஹோ ஹோ ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை என்ன எடுத்துச்
**********************************************************************************************
**********************************************************************************************
( " ஹம ஸபீகா ஜன்ம " - என்ற மெட்டு )
உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்
தீர்ந்திடாத உந்தன் வேட்கையைப் பூர்த்தி செய்திடுவோம்
பால்யமுதலாய் உந்தன் வாழ்வொரு
ஞானமூட்டிடும் ஜீவஜோதி!
வாழ்வெலாம் நீ புரிந்த தவத்தினை
நாவினாலே கூறல் எளிதோ?
ஆழ்ந்த பாற்கடல் ஆன உன்னை
அளவிடல் எளிதோ?
ஆழ்கடல் அதில் அணுவாய் ஆகிட
ஆவல் கொண்டுள்ளோம் (தீர்ந்திடாத)
வாழ்வில் ஓர் கணப்பொழுதெனும் நீ
ஓய்வு கொண்டே நின்றதில்லை
வைரமாம் உன் உடல் உதிரமும்
வற்றி வடிந்திடவே உழைத்தாய்
உன்னையே பலியாக்கி நாடிது
வாழ வகை தந்தாய்
உன்னுடை பலி குண்டமதிலே
சுடராய் ஆகிடுவோம் (தீர்ந்திடாத)
தன்னந்தனியாய் நின்றுலகிலே
விதையினைப்போல் வாழ்வு கொண்டாய்
ஆலினைப்போல் பாரதத்தில்
சங்கம் ஓங்கிட நீ புதைந்தாய்
பாரதம், ஏன்? அகில உலகும்
தங்கநிழ லீந்தாய்
ஆல் இதனிலே நாங்கள் கிளையாய்
இலையாய் ஆகிடுவோம் (தீர்ந்திடாத)
உன்னுடைய மன வேதனையிலே
கிளர்ந் தெழுந்தது எங்களுள்ளம்
"எம் கண்கொண்டே காணுவோம்" எனும்
மந்திரம் ஒலித்தேகி விட்டோம்
உன்னுடை அருள் ஆசி பெற்றே
வழி நடந் திட்டோம்
உன்னுடை உபதேசம் நனவாய்
ஆக்கி முடித்திடுவோம்
உந்தன் தவம் போல் கணப்பொழுதெனும்
நாங்கள் புரிந்திடுவோம் (தீர்ந்திடாத)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
உலகின் குருவாய் பாரதம் ஆகிட
உன்னத சக்தி வளர்ப்போர் நாம்
லட்சிய நாடாய் பாரதம் ஆகிட
தீவிர பக்தி வளர்ப்போம் நாம்
வலிவு படைத்திடு வீரம் கொண்டிடு
என்றெம் முந்தையர் முழங்கிடுறார்
கலியுகத்தினிலே சங்கமே சக்தி
என்று மறைகள் கூறிடுது
முந்தையர் வகுத்த சீரிய நெறியில்
வழுவா தேகும் வீரர் நாம் (உலகின்)
நாட்டினுக் கெனவே இறைவன் படைத்தான்
வேறொரு இன்பம் விரும்போமே
இடர்கள் எம்மை இரும்பென ஆக்கும்
இன்முகத்துடனே ஏற்றிடுவோம்
வெந்தே போயினும் நொந்தே மாயினும்
வந்தே மாதரம் என்றிடுவோம் (உலகின்)
தியாகம் எங்கள் கவசம் ஆகும்
சீலம் எங்கள் ஆயுதமே
வெற்றி கண்டிடப் பிறந்தோம் உலகில்
தோல்விகள் கண்டே தளரோமே
தீமை சூழ்ந்திடும் உலகில் நாங்கள்
தர்மக் கொடியினை உயர்த்திடுவோம் (உலகின்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
எங்கள் ஆருயிர் தாய்நாடே
எங்கள் பாரதத் திருநாடே
உந்தன் மண்ணினை நீராய் அணிந்தே
புண்ணிய மெய்திடுவோம்
உந்தன் நதியும் மலையும் வனமும்
புனிதத் தலமாகும் (எங்கள்)
நெஞ்சத்தே உன் நினைவெழும்போது
புளகம் தோன்றிடுது
மின்னலை பாயுது மெய் மறக்குது
மகிழ்வு பொங்கிடுது (எங்கள்)
வானவரெல்லாம் இங்கு பிறந்திட
வேட்கை கொண்டிடுரார்
புல்லாய்ப் புழுவாய்ப் பிறக்கினும் உன்மடி
தவழ்ந்திட ஏங்கிடுறார் (எங்கள்)
இமயம் முடியாய் குமரியும் அடியாய்
நிற்கும் எம் தேவி
மாகாளி நீ பராசக்தி நீ
உலகோர் குலதெய்வம் (எங்கள்)
உன்னைத் தீண்டிட மாசு படுத்திட
எதிரியர் எண்ணுகையில்
உதிர அருவியால் ஆருயிர் பலியால்
மானம் காத்தனரே (எங்கள்)
இன்பம் வேண்டோம் நலங்கள் வேண்டோம்
நற்றவ வான் வேண்டோம்
அல்லும் பகலும் உன் ஏவல் புரியும்
அடிமைகள் ஆகிடுவோம் (எங்கள்)
(எங்கள்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
எங்கள் மண்ணிது எங்கள் வானம்
ஹிந்துஸ்தானமிது ஹிந்துவின் பூமியிது
யுகயுகமாய் நாம் இங்கு வளர்ந்தோம்
பல்வகை வளத்தை இங்கு குவித்தோம்
பொன்மய பூமி என்றே உலகோர்
பாடித் துதித்திட ஓங்கி உயர்ந்தோம்
வந்தவர்க்கெல்லாம் வாரி வழங்கி
கரங்கள் சிவந்தனவே
உள்ளம் மகிழ்ந்ததுவே (எங்கள்)
தாய் நாடிது நம் தந்தையர் நாடு
தர்மம் வாழும் கர்ம பூமியாம்
பாருக்கெல்லாம் நல்வழிகாட்ட
பரமன் படைத்த மங்கல பூமி
அனுதினம் இதனைப் போற்றி வணங்கும்
அன்பர்களாகிடுவோம்
பக்தர்களாகிடுவோம். (எங்கள்)
நல்லோர் இங்குப் பிறந்திட ஏங்கும்
நிகரில்லா நன்னாடு சமைத்தோம்
தியாகம் யோகம் தூய்மை பயின்றோம்
மாசுகளில்லாப் பண்பு வளர்த்தோம்
புனிதர் வாழும் புண்ணிய பூமி
புவியில் இணையுண்டோ?
இதற்கோர் ஈடுண்டோ? (எங்கள்)
வாளில் ஒருகை மறுகை ஏரில்
வாயில் பாரத தேவியின் கீதம்
இறைவன் நாமம் நெஞ்சில் வாழும்
செய்தொழிலெல்லாம் வழிபாடாகும்
மக்கள் துயரம் துன்பம் துடைக்கும்
தொண்டுகள் செய்திடுவோம்
பிறவிப்பயன் பெறுவோம் (எங்கள்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
எங்கும் சங்கம்தான் எதிலும் சங்கம்தான்
கலைந்தது ஹிந்துவின் உறக்கம்தான்
கேசவன் கனவு நனவு ஆனதால்
தேசமே எழுந்தது ஒன்றாய்த்தான்!
பாரதப் பண்பின் கிளையாகி
பாரெங்கும் விரிந்து நிழல் தந்தோம்
தியாக வாழ்க்கையை வாழ்ந்தே நாம்
திக்கெல்லாம் ஒளிரும் சுடரானோம்
சக்தி பிறக்கும் கருவானோம்
சாதனை படைத்தே விடையானோம்
சேவையெனும் நல்வேள்வியிலே
சேர்ந்திடும் ஆகுதிப் பொருளானோம்! (எங்கும்)
எதிரியர் சூழ்ச்சியை எதிர்கொண்டோம்
இன்னல்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தோம்
நெருக்கடி விரட்டி சாகசம் செய்தோம்
தேசத்தை மீட்டோம் புனரமைத்தோம்
சதிபழியெல்லாம் பொய்யென தொலைத்து
சத்திய தர்மம் திரும்பச் செய்தோம்
தேசியம் என்பது ஹிந்து ராஷ்ட்ரமே
உண்மையை உணர்ந்தோம் புரிய வைத்தோம்! (எங்கும்)
நித்தம் ஒருமணி சங்கஸ்தானம்
ரிஷிமுனி வாழ்வின் தவமேயாகும்
விளையாட்டுடனே வீரமும் அன்பும்
வேண்டிய அளவு பயின்றிடுவோம்
உலகம் வணங்கிடும் சக்தியினை
ஒன்று கூடியே திரட்டிடுவோம்
பண்புகள் பரப்பும் பாசறையாகி
பாரினை விரைந்தே வென்றிடுவோம்! (எங்கும்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
எத்தனை ஜன்மம் எடுத்தாலும் பாரத மண்ணிலேயே தோன்ற வேண்டுவனே
ஹிந்து பூமியிலே தோன்ற வேண்டுவனே
சத்திய ஆர்வமும் நித்திய சேவையும் சாகச வாழ்க்கையும் வேண்டுவனே
பித்தனாய் மாறியே தொண்டுகள் செய்திடும்
பெருமை கொள் வாழ்க்கையை வேண்டுவனே
ஏழை எளியவர் எங்கள் நந் நாட்டினில் என்றும் பசியார வேண்டுவனே
கோழைகள் இல்லாமல் வீரத் தொழில் செய்யும்
கூட்டம் தொடர்ந்திட வேண்டுவனே
தேசம் அழைத்திடின் பாசம் களைந்திடும் தெய்வீக நல்லருள் வேண்டுவனே
நீசத்தனம் நீங்கி நீதி துலங்கிட
நித்தம் தொண்டாற்றிட வேண்டுவனே
எண்பது கோடிக்கும் நன்மைகள் செய்வதே உண்மையில் முக்தி என்று ஓதுவனே
இப்பணி செய்வதில் எத்தகைத் துன்பமும்
ஏற்றிடுவேன் இது சத்தியமே
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
எம் ஜன்ம பூமி தாயே
எம் கர்ம பூமி நீயே
எம் புண்ய பூமி தாயே
குல தெய்வம் என்றும் நீயே
வாழ்வாம் மலர்தனை உன் திருவடிதனில் படைத்தோம்
ஏழேழு பிறவி தோறும் உனையே வணங்கி வாழ்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
உணவாகி நீறும் ஆகி
உடலத்துடன் கலந்தாய்
ஊனாகி உதிரமாகி
எம்மில் நிறைந்து நின்றாய்
உனக்காகவே எம் வாழ்வு
உனக்காக சாவும் ஏற்போம்
உனக்காக தொண்டு செய்தே
வளமோங்கும் நிலை சமைப்போம்
உனதேவல் செய்துயர்வோம்
ஒப்பற்ற இமயம் உந்தன்
ஒளி வீசும் மகுடமாகும்
முப்புறமும் சூழும் கடல்கள்
ஓயாது மணிகள் தூவும்
இணையற்ற நாடெம் நாடு
என்றே முழக்கம் செய்வோம்
கணமேனும் உனை மறந்தே
உயிர் வாழச் சகியமாட்டோம்
உனதேவல் செய்துயர்வோம்
நீ காத்த நெறிமுறைகள்
காலத்தை வென்ற அமுதம்
நீ உறையும் ஆலயங்கள்
தர்மத்தின் மையமாகும்
பண்பின் பதாகை ஏந்தி
புவியெங்கும் விஜயம் செய்வோம்
பண்பாட்டின் தென்றல் ஆகி
உள்ளங்கள் குளிர வைப்போம்
உனதேவல் செய்துயர்வோம்
தாய்ப் பாசம் ஓங்க வைப்போம்
தனயர்கள் இணைய வைப்போம்
தாய் நாடுயர்த்தும் உணர்வை
நெஞ்சங்கள் தோறும் வளர்ப்போம்
கைம்மாறு கருதிடாமல்
கடமைகள் ஆற்ற வந்தோம்
கணமேனும் துஞ்சிடாமல்
பயணம் தொடர்ந்து செல்வோம்
உனதேவல் செய்துயர்வோம்
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
("வந்தே ஜனனீ . . ." மெட்டு)
எம்மை ஈன்றே இன்னமுதூட்டிய பாரதமாதா வாழி
கோடி, கோடி வீரரின் தாயே ஜகஜனனீ சரண் புகுந்தோம்
உலகிலுயர்ந்த வெள்ளிப் பனிமலை
இமயமதனை நீ முடியென அணிந்தாய்
நளிர்மணி நீர்கள் நின்பதம் வருட
இணையிலா எழிலுருக் கொண்டோய் (எம்மை)
கங்கை யமுனை சிந்து காவிரி
நதிகள் உந்தன் அமுதினை அளிக்க
கண்ணன் குழலிசை கேட்ட த்வாரகை
கன்னிக் குமரியும் உடையோய் (எம்மை)
அன்பால் உலகை ஆட்கொளும் தாய் நீ
மங்களம் நல்கும் கல்யாணீ நீ
உன்னரும் லீலைகள் புத்துயிரூட்டிட
உயர்வுறு முனிவோர் உறைவே (எம்மை)
இன்னல் தீர்த்தே இன்பம் நல்கும்
இன்மை ஒழிக்கும் ஞானச்சுடர் நீ
ரிஷி, முனி, வீரர் யோகிகள் பணியும்,
மாயையை மாய்க்கும் குரு நீ (எம்மை)
சக்தி சாலியாம் துர்க்கை நீயே
செல்வம் நல்கும் திருமகள் நீயே
கல்வி அளிக்கும் வாணியும் நீயே
ஈடிலா மைந்தரின் தாயே (எம்மை)
உன்பொருட்டே நாம் உலகில் வாழ்வோம்
உந்தன் அன்பாம் அமுதினை உண்போம்
உந்தன் வலியுறு மைந்தர் நாங்கள்
உன்பணி என்றும் புரிவோம் (எம்மை)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
என்று காண்போம் எங்கள் சிந்துவை
என்று உள்ளம் ஏங்குது
தெய்வ நதியில் மூழ்கி எழவே
தாபம் நெஞ்சில் பொங்குது
சாமகான இசை பிறந்து
சாதகர் மனம் மகிழும் பூமி
வேத கானம் எதிரொலிக்க
நாத வெள்ளம் பெருகும் பூமி
அணுஅணுவிலும் ஆத்ம ஞான
அனுபவம் இழையோடுது
பக்தி அருவி பீரிட்டெழுந்தே
பாக்களின் வழி பாய்ந்த பூமி
மந்திரங்கள் மனதில் உதிக்க
மாதவங்கள் கண்ட பூமி
விண்ணில் வெளியில் தென்றலிலுமே
வாழ்த்து ஒலிகள் மிதக்குது
சிந்து நதியே அம்பிகை நீ
சிந்தை நின்ற தேவி நீயே
நதிகள் தலைவி அமுதவல்லி
நற்கதியினை அருள்பவள் நீ
சிந்து இன்றி ஹிந்து இல்லை
ஹிந்து வாழ்வு சிதைந்திடும்
முந்தையர் போல் சிந்து நதியால்
முக்தி பெறவே விரதம் ஏற்போம்
புண்ய நதியை மீட்க வேண்டி
பீஷ்ம சபதம் செய்துயர்வோம்
எந்த விலையும் தந்து விரைவில்
சிந்து சொந்தம் ஆக்குவோம்
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஏகுவோம்....ஏகுவோம் நாம் வீறுடன் இன்றே
பாரத தர்மம் காத்திடுவோம்
மாமலை ஆழ்கடல் எல்லையில் கொண்ட
பாரத தேசம் எழுந்தது காண் (ஏகுவோம்)
பாரத நாட்டை அடிமை யாக்கிட
கனவுகள் காணும் அந்நியர் காண்
பாரத வீரர் திரண்டெழுந்தே
அன்னையின் மானம் காத்திடுவோம் (ஏகுவோம்)
ஹிந்துஸ்தானின் வீதியிலெங்கும்
ஆவினம் கதறி அழுவது கேள்
ஹிந்துஸ்தானில் ஹிந்து மைந்தரும்
அஞ்சி நடுங்கி வாழ்ந்திடவோ (ஏகுவோம்)
வீரசிவாஜி பிரதாப சிம்மன்
வளர்த்த தீயும் அணைந்திடுமோ?
வாஞ்சி நாதனும் கட்டபொம்மனும்
வாழ்ந்த பூமியும் வீழ்ந்திடுமோ? (ஏகுவோம்)
வங்கம் எங்கே? சிந்துவும் எங்கே?
வஞ்சகர் சூழ்ச்சியும் வென்றிடுமோ!
வானம் வாழ்த்திட வையம் வியந்திட
வங்கமும் சிந்துவும் பெற்றிடுவோம் (ஏகுவோம்)
'அன்றும் இன்றும் என்றும் இங்கே
அதர்மம் அழித்திட நான் வருவேன்'
என்றே கூறிய கண்ணன் வடிவம்
நாமே என்று உணர்ந்திடுவோம் (ஏகுவோம்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒரே சிந்தனை.....
அந்தக் கேசவன் கனவினை நனவாய் ஆக்கணும்
அதே சிந்தனை.....ஒரே சிந்தனை.....
கிராமங்கள் தோறும் ஷாகா பரவணும்
கிரமமாய் அதுவும் நடக்கணும்
அதிகநேரம் தந்து அன்னையின் பணிதனில்
அதிகம் அதிகம் பேர் திளைக்கணும் (அதே)
நம்முடைய இயக்கங்கள் எங்கணும் வளரணும்
நல்லவர் தலைமை ஏற்கணும்
நாட்டு நலன்கருதும் மக்கள் அனைவரையும்
கூட்டி ஒன்றாக இணைக்கணும் (அதே)
ஏழ்மை ஒழியணும் நோய்கள் நீங்கணும்
அனைவரும் கற்றவர் ஆகணும்
ஆலயம் பொலிவுடன் திகழ வைக்கணும்
வேலை இல்லாமை மாறணும் (அதே)
ஜாதி பேதங்கள் இல்லை என்றாகணும்
ஹிந்து நாமென்று உணரணும்
பாரத நாடிது பார்தனில் உயரணும்
பாரினில் பண்பினைப் பரப்பணும் (அதே)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஓஹோ ஹோ ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை என்ன எடுத்துச் சொல்வோம்
அதிலும் ஹிந்து ராஷ்ட்ரம் இதுதான் என்று விளக்கிச் சொல்வோம்
இமயமும் குமரியும் எல்லை உடையது நாடு நம்முடை நாடு - பாரத நாடு ஹிந்துஸ்தானம்
இதனையே காத்திட வேண்டி வாழ்ந்தவர் யாரு மாண்டவர் யாரு ஹிந்து மக்கள் நல்லாச் சொல்லு
தன்னுடை மண்ணே தனக்கு தெய்வம் என்று கருதும் கூட்டம் அதுவே ராஷ்ட்ரம் (ஹிந்து ராஷ்ட்ரம்)
இராமனும் கண்ணனும் இங்கே தோன்றி வளர்ந்தார்-தர்மம் காக்க ஆமா(ம்) ஆமா(ம்)
சிவாஜி மன்னனும் இங்கே ராஜ்ஜியம் கண்டான் - ஹிந்து ராஜ்யம் - ராம ராஜ்யம்
அன்னவர் முன்னவரென்று பெருமை கொள்ளும் மக்கள் கூட்டம் அதுவே ராஷ்ட்ரம் (ஹிந்து ராஷ்ட்ரம்)
கற்பினை கண்ணென போற்றும் பண்புடை நாடு நம்முடை நாடு கண்ணகி நாடு - சீதை நாடு
தியாகமே வாழ்வின் மையம் போகம் அல்ல என்றிடும் நாடு - பாரத நாடு இல்லை ஈடு
பண்பிலே உயர்வு கண்டு பெருமை கொள்ளும் மக்கள் கூட்டம் அதுவே ராஷ்ட்ரம் (ஹிந்து ராஷ்ட்ரம்)
பண்பிலே சிறந்த நாடு நம்முடை நாடு பாரத நாடு - நல்லா பாடு ஆமா(ம்) பாடு
இதனையே அழித்திட வேண்டி வந்தவரெல்லாம் எதிரியராவர் - காத்தவர் நண்பர் - ஆமா(ம்) ஆமா(ம்)
என்பதில் ஒத்த கருத்தை கொண்டிடும் அந்த மக்கள் கூட்டம் அதுவே ராஷ்ட்ரம் (ஹிந்து ராஷ்ட்ரம்)
செல்வத்தில் இல்லாதவனோ உள்ளவனென்றோ -வேற்றுமை இல்லை சுரண்டல் இல்லை - சண்டை இல்லை
பிறப்பிலே உயர்வு தாழ்வு கருதும் அந்த கொடுமை இல்லை - ஜாதி இல்லை பேதம் இல்லை
குடும்பமாய் ஒன்று பிணைந்து வாழும் அந்த மக்கள் கூட்டம் அதுவே ராஷ்ட்ரம் (ஹிந்து ராஷ்ட்ரம்)
------------ கீழ் காணும் வரிகள் 2-2-1988ல் வெளியான பாமாலையில் உள்ளது -------------------------
அண்ணாச்சி ஆர்.எஸ்.எஸ்.- ன் கொள்கை என்ன எடுத்து சொல்லு
அதிலும் ஹிந்து ராஷ்ட்ரம் இதுதான் என்று விளக்கி சொல்லு
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒண்ணுதான் ஒண்ணுதானே நம்ம நாடு தம்பி
ஒண்ணுதான் ஒண்ணுதானே
ஒண்ணுதானே நம்மநாடு எண்ணிப்பாரு நல்லா தம்பி (ஒண்ணுதான்)
கங்கக் கரை ராமனுக்கு ராமேஸ்வர மண்ணு தெய்வம்
செங்குட்டுவ சேரனுக்கோ இமயமலக் கல்லு தெய்வம்
ராமேஸ்வரமண்ணு தெய்வம், இமயமலக் கல்லு தெய்வம் (ஒண்ணுதான்)
பாண்டி நாட்டு ஆண்டாளுக்கு கண்ணனேதான் எண்ணமெல்லாம்
ராஜபுத்ர மீராவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம்
ஆண்டாளுக்கும் மீராவுக்கும் கண்ணனேதான் எண்ணமெல்லாம் (ஒண்ணுதான்)
செந்தமிழின் முதலெழுத்தா வள்ளுவரு சொன்ன 'அ' னா
எந்த மொழிக்காரருக்கும் முதலெழுத்தா ஆனதனால்
செந்தமிழின் முதலெழுத்தும் எந்தமொழி முதலெழுத்தும் (ஒண்ணுதான்)
அங்கக்கிங்க பேதமில்ல, ஊரு மொத்தம் ஒரேசனம்
நல்லாச் சொல்லு நாலுதரம், நாடு மொத்தம் ஒரே இனம்
ஊருமொத்தம் ஒரே சனம், நாடு மொத்தம் ஒரே இனம் (ஒண்ணுதான்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒரு வரம் அருள் அன்னையே நீ
இந்த நல்வரம் ஈந்திடு
மனமயங்கும் பார்த்தனானோம்
கீதையால் வழிகாட்டிடு
இந்த நல்வரம் ஈந்திடு
அம்மையானாய் உலகினுக்கே
வீரதீரர் கருவகம் நீ
ஆதி அந்தம் அற்ற உன்னை
தேவ தேவர் போற்றுறார்
நிமிர்ந்து நின்று ஹிந்து நாமென
முழங்கப் பெருமை தந்திடு (மன மயங்கும்)
ஆத்ம மறதி மூடி மறைக்குது
தன்னுணர்வை எழுப்பிடு
பைரவன் போல் சீறி எழவே
போர் முழக்கம் ஈந்திடு
மனத்தகத்தே நான்மறைதம்
புனித ஞானம் தந்திடு (மன மயங்கும்)
ஹிந்து மைந்தர் எங்கணும் ஒரு
குலத்தவர் என உணர்த்திடு
தேசபக்தி தீச்சுடரினை
உள்ளந்தோறும் மூட்டிடு
நித்தம் உந்தன் புகழைப்பாடிட
நாவிலே இசை தந்திடு (மன மயங்கும்)
சோர்வு சூழுது காரிருள் போல்
ஒளி அளித்தே ஊக்கிடு
கடும் உழைப்பின் பாதை மறக்குது
குரல் கொடுத்தே நடத்திடு
இன்னல் சூழும் பாதை தான் எனில்
வெல்லும் வலிமை தந்திடு (மன மயங்கும்)
உன் பழம்பெரும் புகழ்க் கனவினைக்
கண்ணில் என்றும் தீட்டினான்
கேவசன் தன் வாழ்வில் கொண்ட
லட்சியத்தை ஊட்டினான்
நனவு ஆகிட நிறைவு கண்டிட
ராம பாணம் தந்திடு (மன மயங்கும்)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒருநாள் மாலைப் பொழுதினிலே உலவிவரும் நல் வேளையிலே
இளைஞர் பலரும் முறையுடனே விளையாடுவதைக் கண்டேன்
அழகிய அவ்விடக் காட்சி
அதனால் வாழ்வில் மாற்றம்
உடல் மனம் அறிவு எனப்பல உயர்ந்திடும்
உன்னத நிலை கண்டேன்
சின்னஞ்சிறுவர் கூடிநிற்க
அவர் சீரிய முறையில் அணிவகுக்க
முக்கியசிக்ஷக் எனும் ஒருவர்
முறைப்படி நிற்க விசில் கொடுத்தார்
'டர்ர்ர்....டக்! டர்ர்ர்....டக்!' அதன்படி அனைவரும் நின்றார்.
தியாகம் வாழ்வினிலின்பம்
தந்திடும் என்பதைக் காட்டும்
காவிக்கொடியை ஏற்றி அனைவரும்
த்வஜ ப்ரணாம் தனைச்செய்ய
'ஏக்-தோ-தீன்' என்றே கட்டளை கொடுத்தார்.
திடமுடன் உடலைக் காக்க
திவாகரன் தனைவணங்கி
மந்திரத்துடனே ஆதித்தியனை
மனம் ஒன்றியே போற்றி
'ஓம் மித்ராய நமஹ' சூரிய நமஸ்கார் செய்தார்.
மூச்சுள்ள வரை வாழ்வு
முழுமூச்சுடன் நம் தொண்டு
அச்சமின்றியே தேச சேவையைச்
செய்திட உணர்த்தும் ஆட்டம்
'கபடி கபடி கபடி கபடி' கட்டுப் பாட்டுடன் ஆடி
வியர்வை சிந்தவே ஆடி,
வீரகோஷம் முழக்கி
அயர்வின்றியே அனைவரும் அமர்ந்து
ஆனந்தமாகவே பாட
'சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி' தந்தது தாயக பக்தி.
பயனுறு அம்ருதவசனம்
பொருள்மிகு செய்யுள் சொல்லி
பண்படுத்திடும் கதையால் தேச
பக்தியில் உள்ளம் நிறைய
'ராமன் கண்ணன் நடந்த பூமி நாமும் வாழ்வது பேறு!'
முக்கிய சிக்ஷக் மீண்டும்
முறையாய் வரிசையில் நிறுத்த
ஐக்கியமாக மனம் ஒன்றியே
அனைவரும் பிரார்த்தனை செய்து
'பாரத் மாதா கீ ஜெய்' களிப்புடன் கலைந்து சென்றார்.
ஒரு மணிநேரக் காட்சி உருவாக்கிய நல்மாட்சி!!
'சாதனை புரிந்திட ஷாகா, ஈடிணை இதற்கெதும் ஆகா.'
அறிந்தேன் உண்மை அதனால் என்னை , அர்ப்பணித்திடவே துணிந்தேன்
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட
தீபமாலையாய் ஆகிடுவோம்
மெளன தவசியாய் சாதகனாகி
இமயப் பனிபோல் உருகிடுவோம்
புத்தெழுச்சியின் கீதமாகியே
புதிய திருப்பம் தந்திடுவோம்
துணிவும் தீரமும் நெஞ்சினில் தாங்கி
புதிய சக்தியின் சிகரம் காண்போம்
சங்க சக்தியின் முழக்கம் கேட்டே,
அசுர சக்திகள் அழிந்தொழியும். (மெளன)
பிறர் நலம் பேணும் லட்சியத்துடனே
பிறர் துயர் துடைத்தே வாழ்ந்திடுவோம்
தூய்மையும் உறுதியும் மனதில் நிறைந்தே
அன்பு பொழிந்தே வாழ்ந்திடுவோம்.
நிராசை இருளும் சூழ்ந்த கடலிலே
படகாய் வந்தே காத்திடுவோம் (மெளன)
பக்தி உணர்வே மக்களின் சக்தி
வழிவழியாய் வரும் செல்வமிது
பாரதத் தாயின் பாத மலர்களை
பாடிப் புகழ்ந்தே வணங்கிடுவோம்
மக்கள் வாழ்வில் இரண்டற இணைந்தே
சங்க உணர்வை வளர்த்திடுவோம். (மெளன)
பாடல் பட்டியல்
**********************************************************************************************
**********************************************************************************************
ஒன்றே தர்மம் பண்பாடொன்றே ஒன்றே நம்முயிர் நாடு
பரத அன்னையின் சந்ததியர் நாம் பாரத நாடிது நமதே
நாள்தொறும் ஷாகா பயிற்சியாலே
நெறிமுறை கட்டுப்பாடுகள் கற்போம்
தாய் நாட்டினிடம் தீவிர பக்தி
தாய்க்கென அளிப்போம் உடல் மனம் பொருளை
பரதபூமியின் புழுதியும் புல்லும்
உயிரினும் உயர்ந்த தாகும்
(பாரத நாடிது நமதே)
மூடப்பழக்கம் மேலோர் கீழோர்
மக்களைப் பிரிக்கும் பேதமொழிப்போம்
ஒருமை மந்திரம் எங்கும் ஒலித்திட
ஒரேகுடும்பப் பாசம் வளர்ப்போம்
புத்தெழுச்சியின் கதிர்கள் விரியும்
இதுவே வாழ்வின் சபதம்
(பாரத நாடிது நமதே)
ஜாதி சழக்கை அறவே துறந்து
சுயநல மாநில தீமை களைந்து
குறுகிய வெறிகள னைத்து மகற்றி
ஒன்றே நாடெனும் பக்தி வளர்ப்போம்
ஹிந்து அனைவரும் ஒன்றாய் வாழ்வோம்
இதுவே புனிதக் கடமை
(பாரத நாடிது நமதே)
உந்தும் உணர்வால் உழைப்பினாலே
ஹிந்து ஒற்றுமை சக்தி வளர்ப்போம்
புவியனைத்திலும் எதிரொலி செய்யும்
பரத தேவியின் வெற்றி முழக்கம்
அல்லும் பகலும் லட்சிய தியானம்
இதுவே பூரண யோகம்
(பாரத நாடிது நமதே)
**********************************************************************************************
பாடல் பட்டியல்