த முதல் நோ வரை





த முதல் நோ வரை

பாடல் பட்டியல்

தர்ம யுத்தம் வந்தது தவமிருப்போம் மாதவமிருப்போம் தன்வலியுணர்ந்த அனுமன் போலே தாயே உன் பாதம் தொழுகின்றோம் தாயகத்தின் தரமுயர்த்திட தாய்ப்பாசம் ததும்பும் தாய்த்திரு நாடே தாயின் தாளில் இடையறாத தவம் தியாக மந்திரம் தாரகமாக்கி திருப்பணி இதற்கு உன்னத இலக்கு துடித்தெழுந்திடுவோம் அணிவகுத்திடுவோம் துர்க்கைத் தாயைப் போற்றிடுவோம் தெய்வத்தின் ஆசி பலத்தோடு தேச பக்த சாதகா தேசமே நமக் கெல்லாம் கொடுக்குது தேசபக்த வீரனே அணிதிரண்டிடு தேசமும் தெய்வமும் தேசமே நம் தெய்வம் என்ற மந்திரம் தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம் நம் கொடியினது பெருமையை அறிந்து பாடுவோம் நமக்கு எல்லாம் அம்மா யாரு நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு நரபலி கொடுத்த வீரவங்கமும் பாஞ்சாலமும் இன்று நாட்டுக்காக வாழுவோம் நல்ல பண்பு நாடியே நாட்டுப் பற்றினை ஊட்டி வளர்க்கும் நாட்டுப்பற்றை சுவாசம் செய்த நாடு எங்கணும் உடன் சிங்கநாதம் செய்குவோம் நாவினிக்க மனமினிக்க நாடினிக்க நாமினிக்க நான் கேசவன் திருவடி தொடர்ந்திடும் வீரன் நிலை உயர்த்துவோம் - நாட்டின் நிலை உயர்த்துவோம்

தர்ம யுத்தம் வந்தது

தர்மயுத்தம் வந்தது கர்ம வீரர் ஆகுவோம் தினவெடுக்கும் தோளுடன் துடித்தெழுந்து செல்லுவோம் வேதகீதை பூமியை ஞானவீரர் பூமியை யோகியர் தம் பூமியை புல்லியர்கள் தீண்டவோ தந்தை தாய் குருவென சந்ததம் வணங்கிடும் எங்கள் தேவி பூமியை தாக்குவோன் தகர்ந்தனன் சைவ வைணவத்துடன் சாக்த பௌத்த ஜைனமும் போற்றியே வலம் வரும் புண்யபூமி வீழுமோ? காளி சூலம் ஏந்தினள் கந்தன் வேலை ஏந்தினன் நெற்றிக்கண் திறந்தது சுதர்சனம் பறந்தது எங்கு சென்று ஒளியினும் எவர் பரிந்து நிற்கினும் தப்பி ஓட வழியுமில்லை ராம பாணம் வந்தது. எவ்விலை கொடுத்துமே மீட்போம் எங்கள் அன்னையை வெற்றி அன்றி வேறெதுவும் கண்டிடாத வீரர் நாம் நல்ல வாய்ப்பு வந்தது தியாகம் வீரம் காட்டிட தர்மயுத்தத் தீயில் வெந்து தங்கமாக மீளூவோம்
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தவமிருப்போம் மாதவமிருப்போம்

தவமிருப்போம் மாதவமிருப்போம் தனயர்கள் தனிப்பெரும் தவமிருப்போம் (தவமிருப்போம்) மோகங்களில் மனம் மயங்கிட மறுத்தோம் தாகங்களில் உளம் தளர்வதை விடுத்தோம் இன்னல்களைப் புன்னகையால் வென்றோம் இடர்களை நாம் ஈவின்றிக் கொன்றோம் உயிரினும் உயர்ந்த லட்சியத்தின் மேல் அட்சயப் பற்றுடன் தவமிருப்போம் (தனயர்கள்) சங்கஸ்தானம் ஒரு யாகக் குண்டம் அங்கனுதினம் ஒரு மணி ஆகுதியாம் தாரக மந்திரம் ஹிந்து ஒற்றுமை பாரதத் தாயவளே நம் தெய்வம் பரத தேவியின் பரம வைபவம் வரம் வேண்டியே தவமிருப்போம் (தனயர்கள்) பல்வகை வளங்களில் வளர்ந்தோங்கியே புவி போற்றிடவே வாழ்ந்தனர் அன்று நாடனைத்தையும் நாடிப் பிழைத்து நாணி நடுங்கி வாழ்கிறாள் இன்று அன்னையவள் அரியணை யேறிடுவாள் கண்டு உவந்திட தவமிருப்போம் (தனயர்கள்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தன்வலியுணர்ந்த அனுமன் போலே

  தன்வலியுணர்ந்த அனுமன் போலே ஹிந்து சக்தியை எழுப்பிடுவோம் தன்மானத்தால் நெஞ்சு நிமிர்ந்த தர்ம சக்தியை நிறுவிடுவோம் தறுகண் மிலேச்சர் அன்னியரின் கீழ் அடிமைகளானதும் எதனாலே? கோமாதாவும் கற்புடைப்பெண்டிரும் கதறித் துடித்ததும் எதனாலே? ஆலய மழிந்து தர்ம மிழந்து தலை குனிந்ததும் எதனாலே? ஹிந்து நாடிது ஹிந்து மைந்தர் நாம் உணர்விழந்தோம் அதனாலே சிறுமைகள் போதும் சீறியெழுந்தே பாரத சக்தியைத் திரட்டிடுவோம் (தன்மானத்தால்) உலகம் எங்கணும் பேரரசோச்சிய ஈடிணையில்லாத் துணி வெங்கே? நிலம் நீர் வானம் எங்கணும் ஆய்ந்தே சத்தியம் கண்ட உழைப்பெங்கே? கலைகளனைத்தின் அடிமுடி கண்டே உலகுக் களித்த உணர்வெங்கே அன்னியரைப் போல் நடையுடை சிந்தனை நடித்து வாழும் இழிநிலை ஏன்? பாரதப் பண்பின் பெருவழி நின்றே அன்னிய மோக மகற்றிடுவோம். (தன்மானத்தால்) தன்னையுணர்ந்த ஹிந்து சக்திமுன் முகலர் அரியணை தவிடுபொடி தன்னையறிந்த நரேந்திரன் தாள் வீழ்ந்து பணிந்தது நானிலமே ஹிந்து நாடெனும் உணர்வினாலே இமயமும் குமரியும் ஒன்றாகும் அவமானங்கள் இழிவுகள் நீங்கி அகண்ட பாரதம் உருவாகும் இல்லந்தோறும் உள்ளந்தோறும் ஹிந்து ஜோதியை ஏற்றிடுவோம். (தன்மானத்தால்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தாயே உன் பாதம் தொழுகின்றோம்


தாயே.....!
உன் பாதம் தொழுகின்றோம்
ஒரு சபதமெடுக்கின்றோம்

உன் ஒவ்வொரு கோயிலும் கெளரவச் சின்னம்
அதை அழிக்க நினைப்பவர் தோற்பது திண்ணம்
அயோத்தி ராமனின் ஆலயம் மீட்டதில்
அளவில்லாத ஓர் மகிழ்ச்சி
இனி காசி, மதுரா, கண்ணகி கோயிலும்
மீட்டிடும் ஹிந்துவின் எழுச்சி.....       		(சபதம்...)

உன் ஒவ்வொரு மைந்தரும் எங்கள் சோதரர்
சிலர் அன்னியர் வரவால் வேறாய் மாறினர்
பிரிந்த சோதரர் அனைவரையும் இனி
மீண்டும் இணைப்பதெம் உரிமை
இனி நம்மில் எவரும் மாறிவிடாமல்
தடுப்பது எங்கள் கடமை.....        		(சபதம்...)

உன் மண்ணின் ஒவ்வொரு அணுவும் புனிதம்
உன் பெருமை, புகழைப் பாடுவோம் நிதமும்
இழந்த உன்னுடைய அங்கம் அனைத்தும்
பெறுவோம் மீண்டும் உறுதி
இனி ஓரணு மண்ணும் இழந்திட மாட்டோம்
தருவோம் நெஞ்சக் குருதி....    			(சபதம்...)

தாயே.....!
உன் பாதம் தொழுகின்றோம்
ஒரு சபதமெடுக்கின்றோம் 					
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தாயகத்தின் தரமுயர்த்திட

தாயகத்தின் தரமுயர்த்திட தனயர்கள் விரைந்தேகுவோம் சங்கஸ்தானில் திறமை பயின்றே சிங்கமெனக் களம் ஏகுவோம் புனித குருவாம் காவிக் கொடியின் புண்ய தரிசனம் நம்மை உயர்த்தும் யோக ஆசனம் சூர்ய நமஸ்கார் யோகப் பயிற்சிகள் வலிமை சேர்க்கும் நியுத்தம் கற்றே தீரராகி நித்தம் அன்னையின் பணியில் இணைவோம் (தனயர்கள்) பட்டை தீட்டிய வைரம் போலே கட்டுப்பாட்டால் பண்பு மெருகிட வீரம் ஞானம் உள்ள உறுதி வெற்றி கண்டிட வேட்கையுடனே அறிவில் தெளிவும் இனிய சொல்லும் ஆற்றல் வளர்ந்திட தினமும் பயில்வோம் (தனயர்கள்) அனைவரும் நம் நண்பராகிட அன்பு பெருகிடப் பழகி வருவோம் நல்ல தொண்டில் தோள் கொடுத்தே நல்லவர்கள் இணைய வைப்போம் நமது பகுதியின் துன்பம் துடைத்தே நாயகர் எனத் தலைமை ஏற்போம் (தனயர்கள்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தாய்ப்பாசம் ததும்பும் தாய்த்திரு நாடே

தாய்ப்பாசம் ததும்பும் தாய்த்திரு நாடே அனுதினம் உனை நாம் வணங்கிடுவோம் தனயர்கள் எமை பெரும் சுகத்தில் பேணிடும் ஹிந்து பூமி உனைப் பணிந்திடுவோம் மங்கலம் பொங்கிடும் புண்ணிய பூமி வாழ்ந்து உன் பணியில் வீழ்ந்திடுவோம் அனுதினம் உனை நாம் வணங்கிடுவோம் (தாய்ப்பாசம்) தர்மம் நிலைநிறுத்தி தூயவர் காத்திட நான் வருவேன் என்றான் கண்ணன் அவன் பணி செய்திட கங்கணம் பூண்டோம் உனதருளுடன் நிறைவேற்றிடுவோம் அனுதினம் உனை நாம் வணங்கிடுவோம் (தாய்ப்பாசம்) உடல் வலிமை வேண்டும் நன்னெறியும் வேண்டும் இடரனைத்தும் நீக்கும் நன்மதி வேண்டும் ஏற்ற பாதையோ இன்னல் சூழ்ந்தது இன்முகத்துடனே கடந்திடுவோம் அனுதினம் உனை நாம் வணங்கிடுவோம் (தாய்ப்பாசம்) அறவழியில் நின்று மனங்கள் இணைத்து செயலாற்றல் வளர்த்து ஜெயம் கண்டிடுவோம் புவியரங்கில் உன்புகழ் உயர்த்திட புதல்வர்கள் பெருந்தவம் புரிந்திடுவோம் அனுதினம் உனை நாம் வணங்கிடுவோம் (தாய்ப்பாசம்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தாயின் தாளில் இடையறாது தவம்

தாயின் தாளில் இடையறாது தவம் தந்த வரங்கள் கொஞ்ச நஞ்சமோ? சிதறிய ஹிந்துவை சங்க மந்திரம் சங்கமமாக்கும் காட்சியைக் காணீர்! கேசவர் விதைத்த வீரியவிதையும் ஆலாய்த் தழைத்த அற்பதம் காணீர்! நிழலில் தங்கிய சாதகர் கோடி லட்சியக் கண்கள் பெற்றது காணீர்! (சிதறிய ஹிந்துவை) விழுதுகள் நாட்டின் வாழ்வனைத்திலும் புத்துயிர் பாய்ச்சும் காட்சியைக் காணீர்! கங்கையாகிடும் ஹிந்து சிந்தனை எங்கும் எதிலும் பரவுது காணீர் (சிதறிய ஹிந்துவை) அடக்குமுறைகளும் அவதூறுகளும் சதிசூழ்ச்சிகளும் தோற்றன காணீர்! சத்திய வெள்ளம் சீறிப்பாய்ந்திட சக்தியின் ஆற்றல் எழுந்தது காணீர் (சிதறிய ஹிந்துவை) பரிவுடன் கனிவுடன் அனைவரும் இன்று வரவேற்றிடும் அரும் காட்சியைக் காணீர்! சர்வம் சங்க மயம் என மாறிட சமர்ப்பணமாகிட விரைந்து வாரீர்! (சிதறிய ஹிந்துவை)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தியாக மந்திரம் தாரகமாக்கி

தியாக மந்திரம் தாரகமாக்கி லக்ஷிய வாழ்வு நடத்திடுவோம் காட்டுமலர் போல் கருகி மறைந்திடும் மின்மினி வாழ்வை வெறுத்திடுவோம் தருமம் வாழ்ந்திட தம்மெலும்பீந்த ததீசி முனிவன் வழிவந்தோம் தரணி ஆட்சியை தெய்வ சீதையை துறந்தான் ராமன் வழிகாட்ட தியாக சக்தியால் நமனை வென்றே சத்தியம் கொணர்ந்தான் நசிகேதன் தியாகம் செய்திடு அமரனாகிடு என்றவர் குரலைக் கேட்டிடுவோம் (தியாக) இன்ப மனையினை போக அரசினை விடுத்தான் கெளதமன் துயர் தீர்க்க தன்னந் தனியாய் பாரதம் வென்றே யதீந்திரனானான் சங்கரனும் விஜய நகரினைப் பேரரசாக்கினும் வித்யாரண்யன் குடில் புகுந்தான் இறைவன் அளித்த உடல் பொருளாவியை நாட்டினுக் கர்ப்பண மாக்கிடுவோம் (தியாக) நானில மதிர தர்மம் முழக்கி நன் மலராகினன் நரேந்திரனும் வேத உண்மையை விளக்கி உணர்த்திய தயானந்தனும் நன் மலராம் தியாக மலர்க்கொடி பாரத மெங்கும் படர்ந்திடக் கேசவன் விதையானான் மலர்க்கொடி யதனில் நன்மலராவோம் நறுமண மெங்கும் பரப்பிடுவோம் (தியாக) தியாக பூமியை போக வாதமும் விலங் குணர்வும் மூடிடுது தம்மை மறந்தே பாரத மைந்தர் பொன்மானைத் தொடர்ந்தோடிடுறார் மேகமகன்றிட மோகமொழிந்திட தியாகப் புயலினை எழுப்பிடுவோம் நம்முடை வாழ்வின் நல்லொளியாலே நாட்டின் இருளை அகற்றிடுவோம் (தியாக)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

திருப்பணி இதற்கு உன்னத இலக்கு

திருப்பணி இதற்கு உன்னத இலக்கு சிம்மாசனம் ஏறுவதல்ல முழு சமூகமும் நம்முடன் இணைத்தே முன்னேறுவதே நம் குறிக்கோள் இதுவரை இவ்விதம் முன்னேற்றம் இதற்கொரு எல்லை கிடையாது முழுமையே நம்முடை லட்சியமாகும். மனதில் தயக்கம் நமக்கில்லை திசைகள் அனைத்தும் இணைந்திடும் அந்த தொடுவானத்தைத் தொட்டிடுவோம். (திருப்பணி) சின்னஞ்சிறிய ஆதாயங்கள் தேசியப்பணி இதன் இலக்கல்ல. விண்ணவருக்கும் கிடைத்திடாத வர ப்ரசாதம் நம் சங்கம் ஈடிணை இல்லா நாடிது எல்லா மேன்மையும் பெறவே வகை செய்வோம் (திருப்பணி) வாழும் உயிர்கள் அனைத்தும் வளமுடன் வாழ்ந்திட செய்வதே நம் செயலாம் அச்சம் துயரம் அனைத்தையும் நீக்கி அனைவரும் வாழந்திட வகை காண்போம் பண்பைப் போற்றி நீதி நிலைக்க பூமியில் நாம் ஒரு விதி செய்வோம் (திருப்பணி) உன்னத லட்சியம் எய்திடவே நாம் வாழ்நாளெல்லாம் தருவோமே ஆயுள் முடிந்தால் அடுத்த பிறவியும் அன்புத் தவமிதில் மூழ்கிடுவோம் வாழ்வோம் தேசம், தருமம் காக்க வீழ்வோம் பணியில் அர்ப்பணமாய் (திருப்பணி)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

துடித்தெழுந்திடுவோம் அணிவகுத்திடுவோம்

  துடித்தெழுந்திடுவோம் அணிவகுத்திடுவோம் தாயகம் நம்மை அழைத்திடுது புவி அனைத்தையும் நடுக்கிய அரக்கர்படை படு தோல்வியைக் கண்டது நம் நாட்டில் வழிவழியாய்ப் போர்க்கள வேள்விகளில் வஞ்சகர் தலைகொய்தே பலி தந்தோம் இனி எந்தப் பகைவரும் துணியாமல் புனிதப் பெரும் படையாகிடுவோம் (துடித்தெழுந்திடுவோம்) தருமத்தை அழித்திட வருகின்றார் திருக்கோயில் தகர்த்திட வருகின்றார் தெய்வம் போல் உயிர் போல் இலங்கும் தாய் நாட்டினை மாய்த்திட வருகின்றார் தெருவெங்கும் போர்க்கொடி உயர்த்திடுவோம் வருவீர் மிலேச்சரைத் துடைத்திடுவோம் (துடித்தெழுந்திடுவோம்) பசியும் பிணியும் நம்மைத் தளர்த்தாது பனியும் வெயிலும் நம்மைத் தடுக்காது கடும் வாதனை சோதனை வந்திடினும் நடை சோர்ந்தே நடுவழி நில்லோம் நாம் வலிமைப் புயங்களில் வெற்றிக் கொடி வாய்தோறும் வந்தே மாதரம் (துடித்தெழுந்திடுவோம்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

துர்க்கைத் தாயைப் போற்றிடுவோம்

துர்க்கைத் தாயைப் போற்றிடுவோம் துர்க்கைத் தாயை வழிபடுவோம் துர்க்கைத் தாயைப் போற்றி வணங்கி சக்தி பெருக்கிடுவோம் சக்தி பெருக்கிடுவோம் சக்தி பெருக்கிடுவோம் அனாதி கால உண்மையிதுவே அவனியில் நிலைத்த உண்மை இதுவே தர்மம் என்றும் நிலைத்து நிற்கும் தரணியில் தர்மம் என்றும் வெல்லும் வரலாற்றினிலே பதிந்த உண்மை வெல்வது தர்மம் தான் வெல்வது அறவழிதான் வெல்வது நன்னெறியே (துர்க்கைத் தாயை) ராமாயணமும் பாரத நூலும் உணர்த்திடும் உண்மையை உணர்ந்திடுவோம் நாம் தோற்றது தர்மம் என்பது போன்ற தோற்றம் மாயை ஏற்பட்டாலும் தர்ம அதர்மப் போராட்டத்தில் தர்மம் வென்றிடுமே தர்மம் நிலைத்திடுமே தர்மம் ஓங்கிடுமே (துர்க்கைத் தாயை) பாரத அன்னை காளியின் வடிவம் பாரினில் தீமையை மாய்த்திடுவாள் துர்க்கைத் தாயாம் பாரத அன்னை கர்ஜனை செய்தே எழுந்து விட்டாள் தீயோர் வெறியர் கயவர் மாய்ந்திட தாயு மெழுந்திட்டாள் தாண்டவம் ஆடிடுவாள் தர்மம் காத்திடுவாள் (துர்க்கைத் தாயை) பிரிவினை வாதமும் பயங்கரவாதமும் பாரினை உலுக்கிடும் வேளையிலும் விரட்டிடுவோம் அதை உலகை விட்டே விரட்டிடவே நாம் வழியும் கண்டோம் நல்லவரை நாம் வல்லவராக்கி சக்தி திரட்டுவோம் தீமை ஒழித்திடுவோம் தர்மம் நாட்டிடுவோம் (துர்க்கைத் தாயை)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தெய்வத்தின் ஆசி பலத்தோடு

தெய்வத்தின் ஆசி பலத்தோடு முன்னேறிடுவோம் நடை போட்டு பாக்கியம் பெற்றோம் சங்கத்தில் இணைய பரம வைபவம் நம் இலக்கு ஜெய ஜெய பாரதம் நம் தேசம் உலகின் குருவே நம் தேசம்…… அறிமுகம் ஆனோம் புதியவராய் அன்பால் இணைந்தோம் சங்கத்திலே நல்லவர் பலரின் நட்பின் பலனாய் நல்ல சிந்தனை நாம் பெற்றோம் (ஜெய ஜெய) கேசவர் மாதவர் தவம் தந்த சங்க கங்கையில் சங்கமித்தோம் கிராமம் தோறும் நகரம் தோறும் ஷாகா பரவிட நாம் உழைப்போம் (ஜெய ஜெய) மனதில் சுயநலம் சிறிதும் இல்லை பொது நலம் சிந்தை செயலிலுமே மானிட சேவையே மகேசன் சேவை மக்கள் நலனைக் காத்திடுவோம் (ஜெய ஜெய) வேற்றுமை நடுவே ஒற்றுமை காணும் ஹிந்துத்துவமே நமது பலம் அகண்ட பாரத லட்சிய அக்கினி அனுதினம் மனதில் கனன்றிடுதே! (ஜெய ஜெய)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தேச பக்த சாதகா

தேச பக்த சாதகா தேவியின் பணிக்கென வந்துதித்த வீரன் நீ விதிவகுக்கும் தீரன் நீ நெடிதுயர்ந்த பெருமலை கொடுமுடியில் ஆலயம் இடையறாது செல்லுவாய் இறுதியிலே வெல்லுவாய். (தேச பக்த) வழுக்கிவிடும் பாதையில் வழியெங்கும் முட்புதர் விழிப்புடனே ஏகிடு வழிகாட்டி யாகிடு. (தேச பக்த) கொடுவிலங்கின் ஓலமும் காரிருளின் கோலமும் கலக்கிடாத நெஞ்சுடன் கடுகியே நடந்திடு. (தேச பக்த) கால்கள் கெஞ்சும் போதிலே கண்கவரும் சோலையில் ஓய்வெடுக்கும் எண்ணமும் உன்னை வந்து தீண்டுமோ? (தேச பக்த) இணையிலாத நாடென இவ்வுலகம் போற்றிட தியாகத் தொண்டளித்து நீ தாயகம் உயர்த்திடு. (தேச பக்த)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தேசமே நமக் கெல்லாம் கொடுக்குது

தேசமே நமக் கெல்லாம் கொடுக்குது நாமும் சிறிது கொடுக்கப் பழகணும்! 1. ஊரெல் லாம்ஒளி சூரியன் தருவான் உலவும் காற்று உயிர் தந்திடுது ஊரில் அனைவரும் பசியா றிடவே உணவைத் தருவது பூமி யிதே ஊரார் நலம்பெற ஓரள வேனும் உதவிட நாமும் பழகிடுவோமே! 2. கொளுத்தும் வெயிலில் மரங்கள் நமக்கு குளிர்நிழல் தந்து இளைப் பாற்றிடுமே தருஅது தருவது நறுமண மலரை தொடுத்திட அழகிய பூ மாலை தியாகம் புரியும் தருபோல் சற்றே பிறருக்கு உதவிடப் பழகிடு வோமே! 3. பள்ளி செல்லாதோர் படிக்கச் செய்வோம் தவிப்போ ருக்குக் குரல் கொடுத்திடுவோம் நலிந்தோ ரைமுன் னேறச் செய்வோம் நல்லிணக் கம்நாம் கண்டிடு வோம் உழைப்பாம் தீபம் ஏற்றி நாமே ஊக்கம் பரப்பிடப் பழகிடுவோமே
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தேசபக்த வீரனே அணிதிரண்டிடு

தேசபக்த வீரனே அணிதிரண்டிடு முன்னேறிடு முன்னேறிடு முன் அணியில் முந்திடு வீரனே.......வீரனே..... புண்யபூமி பாரதம் கண் திறந்திட பூவுலகில் தலைசிறந்த நாடு ஆகிட நாடிவா.....தேடிவா...... நாடித்தேடி ஆடிப்பாடி தியாகம் செய்யவா (முன்னேறிடு) வீரர் தியாக வாழ்வையெல்லாம் நாடறிந்திட தீரர் அந்த முந்தையரின் வழி நடந்திட சென்றிடு..... ஒன்றிடு...... சென்று ஒன்றி நாட்டினுக் குணர்ச்சி தந்திடு (முன்னேறிடு) அன்னியரை நம்பி வாழும் இழிவு நீக்கிட அச்சமின்றி சுயபலத்தில் ஊன்றி நின்றிட வந்திடு....இணைந்திடு.... வந்திணைந்து கர்ம வீரத் தொண்டனாகிடு (முன்னேறிடு) பாதையிலே பாசம் வந்து வழிமறித்திடும் நடுவழியில் மோகம் வந்து திசை திருப்பிடும் விழித்திரு.....நினைத்திரு.... விழித்திரு நினைத்திரு நம் லட்சியத்தினை (முன்னேறிடு)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தேசமும், தெய்வமும் இரு கண்களென

(ஆடியோவில் காண்போம் ஹிந்து தமிழகமே என்று இருப்பதை காப்போம் ஹிந்து தமிழகமே என்று மாற்றி பாடவும்)
தேசமும், தெய்வமும் இரு கண்களென
என்றும் வாழ்ந்திடும் தமிழகமே
வார்த்தையிலல்ல வாழ்க்கையின் மூலம்
காப்போம் ஹிந்து தமிழகமே
காப்போம் ஹிந்து தமிழகமே

பண்புடன் வாழ்ந்திட ராமனின் கதையை
கம்பன் தந்ததும் எதனாலே
மா பாரதமதை மக்கள் மனங்களில்
பதியச் செய்ததும் எதனாலே
காசியும் கயிலையும் கங்கையும் நமதென
உரைத்தே வளர்த்ததும் எதனாலே
தேசமும் தெய்வமும் தர்மமும் ஒன்றென்ற
உணர்வை ஊட்டிட அதனாலே
உணர்வை ஊட்டிட அதனாலே 		(தேசமும் . . )

தேசமே தனது தெய்வம் என்றே
செக்கை இழுத்ததும் எதனாலே
தாயகம் காத்திட தடியடி தாங்கி
தன்னுயிர் தந்ததும் எதனாலே
செப்பும் மொழிகள் பலவானாலும்
சிந்தனை ஒன்றென்ற தெதனாலே
இமயமும் குமரியும் நமதே என்ற
உணர்வுடன் வாழ்ந்திட அதனாலே
உணர்வுடன் வாழ்ந்திட அதனாலே 		(தேசமும் . . )

விடுதலை வீரர், துறவியர், ஞானியர்
மாநிலம் மொழியெனப் பார்க்கவில்லை
வந்தே மாதரம் ஒன்றே தர்மம்
என்றே நல்வழி காட்டி உள்ளார்
பேதங்கள் பேசி தேசத்தைப் பிரிக்க
சதி செய்வோரைப் புரிந்துகொள்வோம்
ஹிந்து தேசியப் பணியிலிணைந்து
ஒருமை அமுதம் பாய்ச்சிடுவோம்
ஒருமை அமுதம் பாய்ச்சிடுவோம்	(தேசமும் . . ) 
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

தேசமே நம் தெய்வம் என்ற மந்திரம்

தேசமே நம் தெய்வம் என்ற மந்திரம் ஒலித்தேகுவோம் பண்பு பாசம் வலிமையுடனே வையத் தலைமை ஏற்றிட . . தேசமே நாடு துண்டு ஆன போது, வாடி வதங்கி சுருங்கினோம் சிந்து வங்கம் மைந்தர் ரத்தம், சிந்தியது நம் பூமியில் மீண்டு எழுந்தது ஹிந்து சக்தி, சங்கம் செய்த தவத்தினால் . . ( தேசமே . . ) மதத்தை மாற்றி பண்பை மாற்றி, வஞ்சகர் வலை விரித்தனர் . பதவி மோகம் பணத்திற்காக, வீழ்ந்தனர் சிலர் வலையிலே இழந்த சோதரர் மீண்டும் இணைப்போம், பாசம் அன்பு வலிமையால் ...(தேசமே) புவனம் முழுதும் ஹிந்து சக்தி , சுடர் பரப்ப செய்குவோம் யுகங்கள் தோறும் அதர்மம் அழிய, அவதரிக்கும் தெய்வமும் கலியுகத்தில் தர்மம் நிலைக்க, சங்கம் ஒன்றே சக்தி தான் . . . ( தேசமே ) நாட்டின் மானம் காக்க என்றும், வல்லமை மிக அவசியம் தொல்லைக் கொடுக்கும் பகைவர் படையை, எல்லைக் கடந்தும் தாக்குவோம் வீறு கொண்டே எழுந்திட்டோம் நாம், பீடு நடையுடன் பயணிப்போம் ...(தேசமே)



தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்

தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம் ஆதியந்த மற்றதிந்த அமர பூமி பாரதம் (தேவ) கிரேக்க ஹூண யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர் பஞ்ச நதிக்கரைதனில் தோல்வி கண்டு சாய்ந்தனர் பஞ்சு போல் பறந்தனர் காற்றிலே கலந்தனர் கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர் பாரத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது ..... பாரிலே ஜொலித்தது (தேவ) பாரதத்தின் மண்ணிலெங்கும் சுயநலம் படர்ந்தது பராக்ரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில் துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது தேசபக்தி ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்.... புத்துணர் வெழுப்புவோம் (தேவ) உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்ப மாக்குது ஒருமையை உடைக்கவரும் மடமையை அகற்றுவோம் ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது... எழுச்சி கீதமே இது (தேவ) அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலைவிரித்து ஆடுது அந்நியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே உருக்குது. ராஷ்ட்ரபக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம் நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது.... இன்றைய பணி இது (தேவ)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நம் கொடியினது பெருமையை அறிந்து பாடுவோம்

நம் கொடியினது பெருமையை அறிந்து பாடுவோம்; அறிந்து பாடுவோம் அதன் மேன்மையை மனந்தனில் உணர்ந்து பாடுவோம் வேதங்கள் வேதாந்தங்கள் நற்கீதை யாவுமே வியந்து போற்றிடும் அரிய தியாகமென்பதை விளக்கும் உண்மைச் சின்னமாகி நின்ற தன்மையை எங்கும் நின்ற தன்மையை என்றும் நின்ற தன்மையை (அறிந்து) பற்பல நூற்றாண்டுகளாய்த் துன்ப மேற்கினும் பூர்ண ஒளிமங்கிடாது ஏற்ற துயர்களும் பாறைமேல் விழுந்த மட்கலத்தைப் போலவே பொடிந்து போனதை, சின்னா பின்னமானதை (அறிந்து) சங்கரர் ராமானுஜர் தம் லக்ஷ்ய மானதும் சிறந்த மன்னர் மன்னவர் வணங்கி வாழ்ந்ததும் திகழ்ந்த தியாக ஜோதி என்றும் வீசி நிற்பதை எங்கும் வீசி நிற்பதை, என்றும் வீசி நிற்பதை (அறிந்து) முள் நிறைந்த பாதை என்று நாம் தெரிந்துள்ளோம் முயன்று சென்று வெற்றிகொள்வோம் என்றறிந் துள்ளோம் விளைந்த ஊக்கம் தானளிக்கும் தியாகக் கொடியினை எங்கள் காவிக் கொடியினை, எங்கள் ராஷ்ட்ரக் கொடியினை (அறிந்து) இமயமுதல் குமரிவரை ஹிந்து மக்களும் என்றும் ஒன்று ஆகி இந்தக் கொடியின் கீழிலே இசைந்த சோதரர்கள் போல் என்றும் தங்களை ஈனம் தானும் மங்கலை, உண்மை இன்பம் பொங்கலை (அறிந்து)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நமக்கு எல்லாம் அம்மா யாரு

நமக்கு எல்லாம் அம்மா யாரு பாரதமாதா பாரதமாதா நமக்கு உள்ள உறவு என்ன ஹிந்து ஹிந்து சோதர ஹிந்து எப்படி வந்தது இந்த உறவு நமக்குஅம்மா பாரதமாதா தாய்க்கு சேவை செய்வது எப்படி ஒருவருக்கொருவர் அன்பை வளர்த்து அன்பை வளர்க்க என்ன செய்யணும் ஷாகா வரணும் ஷாகா வரணும் நாம் அறிந்த மூல மந்திரம் நமக்கு அம்மா பாரதமாதா தினமும் தினமும் ஷாகா வருவோம் காவிக் கொடிக்கு வந்தனை செய்வோம் அதிகாரிகளின் கட்டளைப் படியே ஆடிப்பாடி விளையாடிடுவோம் கண்ணனைப் போலே விளையாடிடுவோம் பாரதநாட்டின் கண்மணி ஆவோம். எனக்கு அம்மா பாரதமாதா உனக்கு அம்மா பாரதமாதா நமக்கு அம்மா பாரதமாதா உரக்கச் சொல்லு பாரதமாதா உணர்ந்து சொல்லு பாரதமாதா
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு

நம்ம நாட்டினுக்கு நல்ல நேரம் வந்தாச்சு - இப்போ கண் நிறைந்த காட்சி காணும் காலம் வந்தாச்சு செங்கொடியைக் கையிலேந்தி, மே தினத்தக் கொண்டாடி உரிமைகள் மட்டும் கோரும் காமரேடு காலம் போச்சு காவியின் கீழணிவகுத்து கட்டுப்பாட்டுடன் உழைத்து கடமையாற்றி உரிமை யேற்கும் நேரம் வந்தாச்சு (நம் நாட்டினுக்கு) அந்நியத்திலே திளைத்து வன்முறையை வழியாக்கும் நாளைய குடிமகனின் கூட்டம் காணோம் எங்கோ போச்சு பாரதத்ததுப் பண் இசைத்து பண்பாட்டில் ஊறி நிற்கும் இன்றைய குடிமகனின் கோஷம் கேட்கும் காலம் வந்தாச்சு (நம் நாட்டினுக்கு) தன்னலத்தினை பெருக்கி தன்மானத்தை யொழித்து அடிமைகள் வளர்க்கும் வயிற்றுக்கல்வி மடியலாச்சு மண்ணிதன் புகழ் அறிந்து மண்ணிதற்காய் வாழ்வதென்று முடியும் மைந்தரை வளர்க்கும் கல்வி வந்தாச்சு (நம் நாட்டினுக்கு) ஜாதிகளின் பூசலென்ன குறுகிய பல வெறிகளென்ன? ஹிந்து ஒன்றுபடுவதா? ஹா என்ற காலம் போச்சு நாடு மொத்தம் ஒரு குடும்பம் கூறு போட அனுமதியோம் ஒருங்கிணைந்து நாடுயர்த்தும் மாட்சி வந்தாச்சு (நம் நாட்டினுக்கு)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நரபலி கொடுத்த வீரவங்கமும் பாஞ்சாலமும் இன்று

நரபலி கொடுத்த வீரவங்கமும் பாஞ்சாலமும் இன்று நானிலமசைக்க வினவிடும் கேள்வி நெஞ்சை உருக்கிடுதே! பிளந்த இந்நாடு மீண்டும் பிணைந்தெழுவ தெப்போ? வெற்றி முழங்கிடவே பகவா வானில் பறப்பதெப்போ? மதவெறியோரை, விஷநெஞ்சோரை, கொடுமையாளரை அடக்கிடுவாருண்டோ? வில்லினை எடு வீரா (நரபலி) சித்தூர் கோட்டையில் தீக்குளித்த நல்மாதரின் ஆவிகளும் ஹல்திகாட்டிலே போரில் மடிந்த வீரரின் ஆவிகளும் பந்தா பைராகி, சம்பூ சத்ரபதி நவகாளியும் நம்மைக் கூவியழைத்திடுதே அமைதியிழந்தே, தாகம் கொண்டே ஆவிதுடிக்குது எங்கே உன் வீரம்? வில்லினை எடு வீரா (நரபலி) எவரோ வென்றிடுவார் உன்னை எவரோ கொன்றிடுவார்? நஞ்சையுண்டபின்னும் சங்கரன் உலகினைத் தாங்கினனே! ஆர்த்திடும் கடலினையே அணையால் தடுத்திடுவாருண்டோ? ஆதவன் எழுந்திட்டால் கொடும் அந்தகாரம் எங்கோ? ஹிந்து எழுந்தால் தன்னையுணர்ந்தால் பகைவரெல்லாம் நடுங்கியே ஓடிடுவார்! வில்லினை எடு வீரா (நரபலி) உலகத்தரசே பலப்பல முறைகள் நீ விழித்தெழுந்தாயே! மனித குலத்தின் வைரிகள் அன்று தலைவணங்கி நின்றார் சகரர் ஹூணர்களை ஜீரணம் செய்தாயே கிரேக்கப் படையினரை விரட்டி அடித்தாயே மமதை கொண்டோரின் வெறி கொண்டோரின் சிங்காதனத்தை சிதற உடைத்தாயே!வில்லினை எடு வீரா! (நரபலி) உலக சகோதர மனித சமத்துவ தத்துவம் பேசுகிறாய்! பலவீனர்களின் சொற்களுக்கெவரும் செவிசாய்த்திடுவாரோ? போதும் போதுமினி வெற்றுரைகள் போதும் வீண்பறை அடிப்பெதெல்லாம் போதும் நிறுத்திடுவாய் பாரதீயமே உலகதத்துவம் தாரகமிதனை பாரில் முழக்கிடுவாய்! வில்லினை எடு வீரா (நரபலி) வகுப்பு வெறியர் வெற்றி கொண்டதால் வங்கம் பிளந்திடினும் பஞ்ச நதமுமே உதிரம் தோய்ந்து துண்டாய் ஆகிடினும் கிரகணகால மிதுவும் இனி என்றும் நிலைத்திடுமோ? அமர நம் ஆன்மா இனி பிரிந்து நின்றிடுமோ? இளங்கதிராதவன் எழுந்து விட்டான், இருட்கணமொழியும் சந்திரப்பிறை மறையும்! வில்லினை எடு வீரா (நரபலி)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நாட்டுக்காக வாழுவோம் நல்ல பண்பு நாடியே

நாட்டுக்காக வாழுவோம் நல்ல பண்பு நாடியே நமது புண்ய பூமியே நமது ஜீவ நாடியே நமது கர்ம பூமியே ஹிந்து என்ற பெருமிதம் ஹிந்து ஒன்றே நம் குலம் ஜாதி வந்து பிரித்திடாமல் பாச நூலில் கோர்த்திடும் வானவில்லின் ஏழுவண்ணம் கிரணம் ஒன்றின் கிளைகளே (நாட்டுக்காக) கோடி கோடி குரல்களில் ஹிந்து தர்ம கர்ஜனை நித்தம் நித்தம் சித்தமான தாயகத்தின் தொண்டர் நாம் 'கலியுகத்தில் சங்க சக்தி' முனிவன் வாக்கு பொய்க்குமோ? (நாட்டுக்காக) தனி நபர் மனம்தனில் தொண்டு ஆர்வம் எழுப்பியே தனி நபர் சமூகம் தன்னில் சங்கமிக்கச் செய்குவோம் பூரண சமர்ப்பணம் ஜன்ம பூமி ஓங்கவே (நாட்டுக்காக) ஆதி தீபம் ஒன்றுதான் கோடி தீபம் ஆனது புயலை வென்ற சுடரிது பாதை காட்டும் யுகமிது ஒளிப்பிழம்பு ஆகுவோம் இருள் கிழித்து ஏகுவோம் (நாட்டுக்காக)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நாட்டுப் பற்றினை ஊட்டி வளர்க்கும்

நாட்டுப் பற்றினை ஊட்டி வளர்க்கும் மந்திரம் வந்தே மாதரம் நாடிது வென்றிட ஊக்கமளிக்கும் தாரகம் வந்தே மாதரம் (வந்தே மாதரம்) இராம பிரானின் கானக வாசக் காவியம் வந்தே மாதரம் சங்கரன் சிறுவயதில் சிரமேற்க துறவறம் வந்தேமாதரம் நரேந்திரன் நடுக்கடலில் நாடிய நற்றவம் வந்தேமாதரம் (நாடிது வென்றிட) பாஞ்சாலங்குறிச்சி பறைசாற்றும் பாசுரம் வந்தேமாதரம் வாஞ்சியும், பாரதியும் வ.உ.சியும் வாழ்ந்தது வந்தேமாதரம் வாழ்வினை ஈந்திடும் மைந்தரின் வீரகர்ஜனை வந்தேமாதரம் (நாடிது வென்றிட) நாட்டிற்கெனவே வாழ்ந்திடுவோம் சங்கல்பம் வந்தேமாதரம் நாடுயர்த்தி புகழோங்கிடச் செய்யும் சபதம் வந்தேமாதரம் கோடி மைந்தரும் ஒரு குரலாய் முழக்கிடுவோம் வந்தேமாதரம் (நாடிது வென்றிட)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நாட்டுப்பற்றை சுவாசம் செய்த

நாட்டுப்பற்றை சுவாசம் செய்த நாகபுரி மைந்தராம் புத்தாண்டில் அவதரித்து புதுயுகத்தை படைத்தாராம் ஹெட்கேவார் வம்சத்தில் வந்த பலிராமின் புதல்வராம் வணங்காமல் எழுந்து நின்று வந்தே மாதரம் சொன்னாராம் மருத்துவப் பாடம் பயின்றுவிட்டு மனிதம் காக்க வந்தாரே சுதந்திரம் வேண்டி நின்று புரட்சிப் பாதையில் சென்றாரே ஒத்துழையாமை போர் செய்து சிறை தண்டனை பெற்றாரே ஓயாமல் நாட்டைச் சுற்றி வேள்வி தீ ஏற்றினாரே நாட்டைப் பற்றி சிந்தை செய்து ஒற்றுமை மந்திரம் ஜபித்தாரே ஒரு மணிநேர சாதகம் கண்டு ஊரையெல்லாம் இணைத்தாரே இளையவர் பாமரர் எல்லோருக்கும் தேச நம்பிக்கை வளர்த்தாரே குட்டி பாரதம் கண்டுவிட்டு அழியா புகழைப் பெற்றாரே
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நாடு எங்கணும் உடன் சிங்கநாதம் செய்குவோம்

நாடு எங்கணும் உடன் சிங்கநாதம் செய்குவோம் நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம் தெய்வ இமய மாமலை கூவியே அழைக்குது தீய பகை முற்றுகை நுழைந்து எம்மை சூழுது தாயகத்தை காத்திட வீறுடன் கிளம்புவோம் நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம் பாரதத்தை கர்ம தர்ம பூமியாக மாற்றுவோம் பாரதப் புதல்வரின் உறக்கம் நீங்கச் செய்குவோம் பார்வையை மறைத்திடும் மோகத் திரையை நீக்குவோம் நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம் வேற்றுமை பரப்பும் சக்தி ஒருமையை அரிக்குது வீரதீர ஆண்மையினைத் தன்னலம் அழிக்குது ஆதவனை விழுங்க எண்ணும் ராகு கேது சூழுது நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம் ராமன் கண்ணன் ராமதாசன் மீண்டும் இங்கு தோன்றிட அர்ச்சுனன் சிவாஜி மன்னன் வீரம் எங்கும் ஓங்கிட குருக்ஷேத்ர பரத பூமி மீண்டும் தூய்மையாகிட நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம் தசாவதாரம் வந்தது கொடுமையை அழித்திட துஷ்ட சக்தியை ஒழித்து சத்ய தர்மம் நாட்டிட தெய்வமே நீ வருக என்று கோடிக்குரல் கோருது நாடு எங்கணும் உடன் போர்ப்பறை முழக்குவோம்
	
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நாவினிக்க மனமினிக்க நாடினிக்க நாமினிக்க

நாவினிக்க மனமினிக்க நாடினிக்க நாமினிக்க நாளெல்லாம் மகிழ்ந்திருந்து பாடுவோம்! பாடுவோம்! நாட்டைக் காக்கும் நல்லவர்கள் நேர்மையாளர் வீரநெஞ்சர் நாள்தோறும் ஷாகாவில் கூடுவோம் கூட்டுவோம் வேதபூமி கர்மபூமி தர்மபூமி பாரதத்தை பாரிதனில் தலைமை ஏற்கச் செய்திடவே தேசபக்தி தெய்வபக்தி சேர்ந்திணைந்து மனதில் பொங்க ஷாகாவில் இக்கணமே கூடுவோம் கூட்டுவோம் (நாவினிக்க...) ஜாதிபேதம் ஏற்றத்தாழ்வு புகழ்ச்சி இகழ்ச்சி மாசுகளை மனதினிலே என்றென்றும் நீக்கிடவே வசுதைவ குடும்பமாக ஹிந்து மக்கள் ஒன்று கூட ஷாகாவே தீர்வு என்று உணருவோம் உணர்த்துவோம் (நாவினிக்க...) மூவிருபது நிமிடங்களில் பண்புகளைப் பதிவுசெய்யும் மூல யந்த்ரமாய் விளங்கும் ஷாகாவை மூலை முடுக்கு பட்டி தொட்டி கிராமம் தோறும் நகரம் தோறும் சங்க கங்கை பெருகிப் பாயச் செய்குவோம் செய்குவோம் (நாவினிக்க...)
	
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நான் கேசவன் திருவடி தொடர்ந்திடும் வீரன்

  நான் கேசவன் திருவடி தொடர்ந்திடும் வீரன் நமனே வரினும் அஞ்சேனே மலர் மாலைகள் என்னை மயக்காது மன மோகமும் போகமும் கலக்காது போற்றினும் தூற்றினும் அயர்ந்திடாமலே லக்ஷியக் கோயிலை எய்திடுவேன் (நான் கேசவன்)) நீள்வழி கண்டுள்ளம் தளராது நிறைமுள் கண்டுள்ளம் மருளாது வீர விரதமாம் தவநெறி ஏற்றே லக்ஷியக் கோயிலை எய்திடுவேன் (நான் கேசவன்) கொடும் அகந்தை என்னை அண்டாது தீ ஆணவம் என்னைத் தீண்டாது ஆத்ம சமர்ப்பண கவசம் பூண்டே லக்ஷியக் கோயிலை எய்திடுவேன் (நான் கேசவன்) உடன் செல்வோர் வாடித் திரும்பிடினும் உறுதுணைவர் எதிர்ப்புரை கூறிடினும் ராஷ்ட்ர தேவனை வணங்கிடத் துடித்தே லக்ஷியக் கோயிலை எய்திடுவேன் (நான் கேசவன்) உடற்கூட்டின் ஆவி பிரிந்திடுமுன் இரு கண்களின் ஒளியும் மங்கிடுமுன் வெற்றி வடிவமாய் பாரதமாகிட லக்ஷியக் கோயிலை எய்திடுவேன் (நான் கேசவன்)
பாடல் பட்டியல் 
**********************************************************************************************

நிலை உயர்த்துவோம் - நாட்டின் நிலை உயர்த்துவோம்

நிலை உயர்த்துவோம் - நாட்டின் நிலை உயர்த்துவோம் பாரதத் திருநாட்டின் நிலை உயர்த்துவோம் - நம்ம பாரதத் திருநாட்டின் நிலை உயர்த்துவோம். நித்தம் நித்தம் ஷாகா வரணும் நாளும் ஒருமணி நேரம் தரணும் நாட்டுப் பணியில் வீடுகளை நாம் இணைக்கணும் (2முறை) நிலை ஊரின் ஜாதிகள் எல்லாம் கூடி உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதம் நீங்கி 'ஒன்றே ஹிந்து' என்றே நாமும் வாழ்ந்திட வேணும் (2முறை) நிலை வாரம் ஒருநாள் சேவா நிகழ்ச்சி விளைந்திடும் அதனால் மனதில் மலர்ச்சி 'மக்கள் சேவை மாதவன் சேவை' உணர்ந்திட வேணும் (2முறை) நிலை அண்டி வாழ்ந்திடும் அவலம் நீங்கிட அனைவரும் கற்றவர் என்றே ஆகிட கிராமம் மாற்றம் முன்னேற்றம் கண்டிட வேணும் (2முறை) நிலை தாயின் தாளில் தர்மப் பாதையில் தரணியை பண்பால் வென்றே நாமும் ஒளிகூட்டி வழிகாட்டும் விளக்காகுவோம் (2முறை) நிலை
பாடல் பட்டியல் 
**********************************************************************************************


Popular posts from this blog

பாமாலை

ப முதல் போ வரை

க முதல் சே வரை