அமைதியும் ஆற்றலும் இணைந்து விளங்கிய
அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம்
அருணோதயம்போல் புத்துயிர் ஊட்டிடும்
ஆசியளித்திடுவாய்
ஆழ்கடல்களும் நெடுமலைகளும் அரணமைத்து நிற்க
ஆனந்தம் ஆனந்தம் தேசப்பணியே ஆனந்தம்
இளைஞர்களே சங்கப்பணி வளர்க்க வருவீர்
இதயத் தூறும் அன்பு அனைத்தும்
இந்த நாடு ஹிந்துநாடு ஹிந்துமக்கள் சொந்த நாடு
இந்த யுகம் ஹிந்து யுகம்
இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு
இரவு கழிந்தது இரவி எழுந்தான்
இருண்ட காலம் இன்றே முடிந்தது
இருள் கவிந்து வானிலே
இல்லந்தோறும் ராமஜோதி
இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம்
இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி
அமைதியும் ஆற்றலும் இணைந்து விளங்கிய
எங்களின் அன்பு மாதவனே
சோதனைகளையே சாதனையாக்கி
சரித்தரம் படைத்தாய் மாதவனே! (2) (அமைதியும்..)
தன்னை யுணர்ந்திட தவம்பல புரிந்திட
துறவறம் வேண்டி புறப்பட்டாய்
தனிநபர் மோக்ஷம் வேண்டாமென்று
தொண்டின் மூலம் இன்பம் கண்டாய் ! (2) (அமைதியும்..)
தீண்டாமை பெரும் தீதென்ற உண்மையை
துறவியர் மூலம் சொல்ல வைத்தாய்
தடைகளை வென்று துறை பல கண்டு
தலைமைப் பண்பினை உணரவைத்தாய் ! (2) (அமைதியும்..)
தேகநலம் மறந்து தேசவலம் வந்து
தேசிய உணர்வினை எழுப்பி விட்டாய்
"நானல்ல நீயே" என்றதன் மூலம்
மனங்களின் பணிவினை பதிய வைத்தாய்! (2) (அமைதியும்..)
கணப் பொழுதேனும் ஓய்வொழிவின்றி
கர்மயோகியாய் வாழ்ந்து நின்றாய்
குணக் கடலாகி குன்றிடை விளக்காய்
ஞானச் சுடராய் ஒளி கொடுத்தாய்! (2) (அமைதியும்..)
பாடல் பட்டியல்
அண்டம் வணங்கிடும் சக்தி படைத்த எம்
பாவன பாரத அன்னையே!
முக்தி ரகசியம் உலகுக் களித்த நீ
தன்னை மறந்தின்று வாழ்வது மேன்?
அன்னபூரணீ ! வறண்டதோ உன்கை?
வாடி வதங்கி நீ நிற்பதுமேன்? (அண்டம்)
துாசு படிந்துன் கேசம் புரண்டிட
வீணைக் குரலும் பஞ்சடைந்ததோ?
ராஜராஜேஸ்வரி ! ஏழை அனாதையாய்
ஏந்தலாய் இன்று நீ ஆகினையே ! (அண்டம்)
வெட்டுண்டு உன் உடல் குறுகிச் சுருங்கிட
வாடித்தாழ்ந்தே உந்தன் கொடி பறக்குது
ரத்னமணிந்தாய் ! இன்றவை இழந்தே
பிச்சை உண்ணும் நிலை வந்ததுமேன்? (அண்டம்)
எங்கோ உந்தன் பூர்வ மகிமை?
எங்கோ உந்தன் பேர் புகழெல்லாம்?
ஆதிசக்தி! நீ சக்தி இழந்தாயோ?
மாண்பும் அழிந்தின்றிழிந்தனையே! (அண்டம்)
புனித உன் உடலினைக் கந்தைகள் மூடிட
நரிகளும் நாய்களும் உந்தனைச் சூழுது
ஹே சிவே! கெளரீ! இவ்வேடம் உனக்கேன்?
மாயையை மாய்த்திடும் அன்னையே! (அண்டம்)
அமுத கலசமும் அருள்மனமும் கொண்டோய்
எழுந்திடு எங்களை ஈன்றவளே!
கோடிக்கோடி உந்தன் மைந்தர்கள் வாழ்க்கையில்
திறனில்லாள் அல்ல நீ தேசுடையோய்! (அண்டம்)
உலகோரின் பிச்சையை ஏற்றிட வேண்டாம்
எழுந்திடு உலகினை ஆண்டிடுவாய்
பளபளத்திடும் உன் சூலத்தை ஏந்திடு
தீமை ஒழித்திடு! ஆட்சி நடத்திடு! (அண்டம்)
பாடல் பட்டியல்
(ப்ராசீகே முகசீ அருண ஜ்யோ தி" - என்ற மெட்டு)
அருணோதயம்போல் புத்துயிர் ஊட்டிடும்
பகவாக் கொடி வாழ்க! பகவாக்கொடி வெல்க!
நம் அனாதிகால சரிதமிது
பெரும் ரணதீரர் தம் வீரமிது
எந்நாளும் நம்மை வாழவைத்திடும் (பகவாக் கொடி)
உயர் முனிவோர் மனத்திடை தவமிதுவே
மா ஞானியர் தம்முடை ஞானமிதே
தியாகத்தின் உருவாய் குருவாய் நிற்கும் (பகவாக் கொடி)
உயிரிழந்தோர் எழுந்திடச் செய்யுமிது
வெறும் கல்லினை தெய்வம் ஆக்குமிது
நம் அமர ராஷ்ட்ரத்தின் ஆருயிர் ஆகும் (பகவாக் கொடி)
வறுமையிலும் செம்மை ஊட்டுமிது
துன்பத்தில் இன்பம் காட்டுமிது
தர்மத்தின் நெறியின் உயர்வை நாட்டும் (பகவாக் கொடி)
அரும் தீபஜோதி இதை அணையவிடோம்
பரம்பரையின் மானம் அழியவிடோம்
நம் முந்தையர் காத்த அமர நிதியிது (பகவாக் கொடி)
நம் உதிர அருவியால் இதைக் காப்போம்
நம் உயர் வலியால் இதன் புகழ் வளர்ப்போம்
நம் ஒவ்வொரு அணுவும் இதற்கென வீழ்ந்திட (பகவாக் கொடி)
பாடல் பட்டியல்
ஆசியளித்திடுவாய் நீ-எந்தன்
ஆசை நிறைவேற-உன்னருள்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தே
மணியெனக் காத்த பாரத நாட்டின்
அங்கம் சிதைந்தே அலறிடும் நிலைமையை
மாற்றிட வல்லமை வேண்டும். (தாயே)
பாரத நாடாம் நந்தவனமிதில்
நச்சு விளைந்தே நாசம் தோன்றுது
ருத்திரன் போலே கோலம் கொண்டே
தீமை யொழித்திட வேண்டும். (தாயே)
துயருறு நாட்டின் சிந்தனையாலே
துடித்திடும் உள்ளம் அளித்திட வேண்டும்
வாழ்வின் விளக்கினை உன் பணிக்கெனவே
அணைத்திடும் வல்லமை வேண்டும். (தாயே)
தோல்வியைக் கண்டே தளரா நெஞ்சம்
வெற்றி கண்டிட வீர விரதமும்
துாய்மையும் எளிமையும் துலங்கிடும் வாழ்வும்
நீ யெனக்கருளல் வேண்டும். (தாயே)
இடியும் புயலும் இருளும் சேர்ந்தே
இன்னல் கூட்டி கலக்கிடும் போதினில்
தாயே உந்தன் திவ்யப் பணியில்
தளராதேகிட வேண்டும் (தாயே)
பாடல் பட்டியல்
ஆழ்கடல்களும் நெடுமலைகளும் அரணமைத்து நிற்க
தாழ்வுறாதறம் காத்துவாழும் எம் அன்னை பூமி
வாழ்வு ஒருமையை மறந்து மைந்தர்கள் வீழ்தல் நிறுத்த வேண்டும்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
வற்றிடாத நற்செல்வ ஊற்றென திகழும் சொர்ணபூமி
அற்றிடாத நதி கனிவளம் பல மல்கும் அமரபூமி
ஏழ்மை வாழ்விலே துடிதுடித்திடும் இழிவு நீக்க வேண்டும்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
பல கலைகளும் இன்ப போகமும் சூழ்ந்த அந்த நாளும்
புலனடக்கியே தியாகியாகியே பண்பை விழையும் நாடு
ஆத்ம மறதியால் அந்நியர்தமை நடித்தல் நிறுத்தவேண்டும்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
பாலை நிலத்தையும் பாதுகாத்திட பலி அளித்த நாடு
விழுங்க வந்தவரை விழுங்கித் தீர்த்த குறுமுனிவன் நாடு
அகமும் புறமுமே அச்சுறுத்திடும் பகையை மாய்க்க வேண்டும்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
ஹிந்து நாமெனும் பெருமிதத்திலே நெஞ்சு விம்ம வேண்டும்
ஹிந்து மக்கள் நம் தெய்வமாகி நாம் தொண்டில் வீழ வேண்டும்
ஹிந்து ராஷ்ட்ரமாம் சத்தியத்திலே பித்தராக வேண்டும்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
காடு மலையிலும் கிராமத் தொலைவிலும் சங்கம் கொண்டுசெல்வோம்
காவிக் கொடியின்கீழ் கோடி வீரர்கள் அணிவகுக்க வைப்போம்
வெற்றி வேலைப்போல் இடர்பிளந்து நாம் சங்கம் நாட்ட விரைவோம்
சங்கம் சங்கமென இடையறாது ஜபம் செய்து வாழ்வோம்
பாடல் பட்டியல்
ஆனந்தம் ஆனந்தம் தேசப்பணியே ஆனந்தம்
தேசப்பணியே தெய்வப் பணியாய்ச் செய்வதில் என்றும் ஆனந்தம்
தினசரி தவமதில் ஹிந்துவை ஒன்றாய் சேர்ப்பதில்தானே ஆனந்தம்
தியாகக் காவிக் கொடியின் கீழே பயிற்சிகள் பெறுவதில் ஆனந்தம்
பாரத அன்னை வெல்க என்றே நாளும் சொல்வதில் ஆனந்தம்
பாரத் மாதா கீ ஜெய் என்றே பக்தியில் பாடிட ஆனந்தம்
[ஆனந்தம் ஆனந்தம் . . .]
சேவகர் ஒன்றாய்ச் சேர்ந்தே வீடுகள் செல்வதில் என்றும் ஆனந்தம்
சென்றே குடும்பம் தாயின் தொண்டுப் பணியில் இணைப்பது ஆனந்தம்
உன்னத ஹிந்து குடும்பம் நாட்டின் இலக்கணமாகும் ஆனந்தம்
உலகே குடும்பம் என்றே சொல்லும் ஹிந்து வாழ்க்கையே ஆனந்தம்
[ஆனந்தம் ஆனந்தம் . . . .]
பெண்மையின் கற்பைக் காக்கும் ஆண்மையின் வீரம் தானே ஆனந்தம்
பெண்மையின் தாய்மையைப் போற்றும் தீரர் வாழும் நிலமே ஆனந்தம்
சீதை கண்ணகி சாரதை மீரா மாதர் குலமே ஆனந்தம்
பாரத நாடே தாயின் வடிவம் பாரத மாதா ஆனந்தம்
[ஆனந்தம் ஆனந்தம் . . .]
புயல் மழை பேரிடர் எல்லாக் காலமும் சேவை புரிவது ஆனந்தம்
மக்கள் மனதில் நம்பிக்கை ஒளி பரவிடச் செய்வதில் ஆனந்தம்
ஒளி மயமான பாரதமேதான் தருமே என்றும் ஆனந்தம்
உலகம் அமைதியை அதனாலே பெறும் என்பதில்தானே ஆனந்தம்
[ஆனந்தம் ஆனந்தம் . . .]
மனிதர் நாமோ இயற்கையின் அங்கம் இயற்கையைக் காத்திட ஆனந்தம்
பசுக்களை மரம் செடி கொடிகளை நதி நீர் நிலைகளைக் காத்திட ஆனந்தம்
தூய்மை பாரதம் ஒன்றில்தானே பாரத மாதா ஆனந்தம்
தூய்மை வாய்மை நேர்மை காப்பது என்றென்றும் அது ஆனந்தம்
[ஆனந்தம் ஆனந்தம் . . .]
பாடல் பட்டியல்
👇ஆடியோ
இளைஞர்களே சங்கப்பணி வளர்க்க வருவீர்
இறைபணியே இந்தப் பணி என்றே உணர்வீர்
உலகமெங்கும் அன்னை அவள் ஆட்சி நடக்கும்
உலக மக்கள் பண்பினராய் உயர்வு பெறுவர் (இளைஞர்களே)
இத்தனை ஆண்டுகள் சுதந்திரம் பெற்றும்
இழிநிலை இன்னும் நீடிப்பதேன்?
எத்தனை திட்டம் அரசினர் போட்டும்
எள்ளளவே பலன் கிடைப்பதுமேன்?
மகத்தான ஒரு மனித சக்தியை
உருவாக்கிடவே மறந்ததனால்
தேசபக்தியும் தூய்மையும் உள்ள
மனிதர்கள் அருகிப் போனதனால் (இளைஞர்களே)
நூறு ஆண்டுகள் அன்னையின் பணியில்
அருந்தவம் செய்வது ஆர்.எஸ்.எஸ்
அருங்குணங்கள் உள்ள மனிதரை
உருவாக்குவதும் ஆர்.எஸ்.எஸ்
ஹிந்து மக்களைத் தட்டி எழுப்பி
ஒன்றுபடுத்துவது ஆர்.எஸ்.எஸ்
அல்லலுற்றவர் துயர்துடைக்க
தொண்டுகள் செய்வதும் ஆர்.எஸ்.எஸ் (இளைஞர்களே)
கலையுது ஹிந்துவின் தூக்கம் - அதனால்
குலையுது அன்னியர் திட்டமெல்லாம்
ஜாதிக்காக ஓட்டளித்த ஒரு
நடைமுறை மாறத் துவங்கியது
மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர்
போற்றுகின்றனர் சங்கத்தை
நீதி கேட்டுப் போராட ஹிந்து
சமூக பிரக்ஞை தோன்றியது (இளைஞர்களே)
கிராமம் தோறும் காவிக் கொடியது
பட்டொளி வீசிப் பறக்கட்டும்!
கோடிக் குரல்களின் பிரார்த்தனை கீதம்
விண்ணை முட்ட ஒலிக்கட்டும்
ஏற்றத்தாழ்வுகள் ஹிந்து விடத்தில்
இல்லை என்று ஆகட்டும்
மாற்று மதத்தைத் தழுவிய நம்மவர்
மீண்டும் ஹிந்து ஆகட்டும்! (இளைஞர்களே)
இருண்ட உலகில் பண்பொளி வீசி
ஒளி காட்டுவது பாரதம்தான்
பண்பொளி வீசும் தீப ஸ்தம்பமாய்
உயர்ந்து நிற்பது சங்கம்தான்
ஆதரவென்னும் எண்ணெய் ஊற்ற
அனைவரும் இன்று முன்வருவர்
எரியும் திரியாய் தியாகம் செய்ய
நாமே இன்று முன்வருவோம் (இளைஞர்களே)
பாடல் பட்டியல்
இதயத் தூறும் அன்பு அனைத்தும்
தாயின் திரு உருவில் கலந்து
இனிய பாரத தேவி ஆலயம்
புனரெழுப்ப ஆசை கொண்டோம்
உடலை வெட்டிச் செதுக்கி மாற்றி
கோவில் மதில்கள் எழுந்து நிற்கும்
உருவிழந்து ஆழப் புதைந்து
மண்ணின் கீழே மூடி மறையும்
வெற்றி தோல்வி புகழ்ச்சி இகழ்ச்சி
ஆசையெல்லாம் அறவே நீங்கும்
இரவு பகலாய் மௌனமாக
ஆலயத்தை சுமந்து நிற்கும்
இன்பம் வந்தால் மகிழ்வதில்லை
துன்பம் கண்டு அழுவதில்லை
ஆலயத்தின் அடித்தளக்கல்
ஆகவே நாம் ஆசை கொண்டோம்
பரிகசிப்போர் கேலி செய்வோர்
ஏளனத்தை சகித்த போதும்
புனித ஒளியை அளிக்க வேண்டி
அணு அணு என உடலை எரித்து
தொன்மைமிகு வரலாறு காட்டும்
தூயவொளியை பரப்ப வேண்டி
பாதை காட்டுது தெய்வ தீபம்
சாதகன் முன்னேறு கின்றான்
தீபத்தின் வைராக்யம் நம்மை
ஊக்குவித்தே உணர்ச்சி தந்திட
காரிருளிலே சூன்யப் பாதையில்
ஒளி பரப்பிட ஆசை கொண்டோம்
கணப் பொழுதேனும் ஓய்வு இன்றி
புயலுடன் போராட வேண்டும்
கொந்தளிக்கும் அலைகளிடையே
உறுதியுடன் முன்னேற வேண்டும்
உடைக்க வந்திடும் பேரலைகளின்
தாக்குதலையே தாங்க வேண்டும்
மெல்லவே முன்னேறிச் சென்று
லக்ஷியக் கரையேற வேண்டும்
தனது உடலை தனது எனவே
கூறவும் வழியின்றிப் போகும்
ராஷ்ட்ரப் படகினை வழி நடத்தும்
கருவி ஆகிட ஆசை கொண்டோம்
பாடல் பட்டியல்
இந்த நாடு ஹிந்துநாடு ஹிந்துமக்கள் சொந்த நாடு
சந்திர சூர்யர் உள்ள வரை ஹிந்து நாடிது - எங்கள் நாடிது
ஹிந்து தர்மம் என்றவுடன் பரந்த மனப்பான்மையோடு
சர்வதர்ம சமத்துவமும் நினைவு வந்திடும்
எம்மதமும் சம்மதமே மதித்திடுவோம் எக்கருத்தும்
என்று சொன்ன முந்தையரின் நினைவு வந்திடும் - பெருமை தந்திடும்
(இந்த நாடு)
பரந்த மனப்பான்மையினை பலவீனம் என நினைத்து
பாரதத்து வெளிமதங்கள் வலை விரித்தன
ஆசைகாட்டி அச்சுறுத்தி மதத்தைமாற்றிப் பண்பைமாற்றி
தேசத்தையே அடிமைசெய்ய சதிகள் செய்தன - துரோகம் செய்தன
(இந்த நாடு)
ஹிந்து மக்கள் வேறுபட்டு இழிவுசொல்லித் தாழ்வு சொல்லி
மதமாற்றும் சக்திகட்கு உறுதுணையானோம்
நாடுதுண்டு ஆனபின்பும் 'பரந்தமனப்பான்மை' பேசி
கேடுதன்னை உணர்ந்திடாது உதவிகள் செய்தோம் - வளர்ந்திடச் செய்தோம்
(இந்த நாடு)
வீட்டினிலே இருக்கும் போதும் ஓட்டுப்போடச் செல்லும் போதும்
ஹிந்துவாக வாழ்ந்திடாது இழிவு தேடினோம்
மாறுபட்டதிந்த நிலை கேடு கெட்ட முந்தைநிலை
வீறு கொண்டெழுந்ததின்று ஹிந்து சக்தியே - தர்ம சக்தியே
(இந்த நாடு)
ஒன்றுபட்ட ஹிந்துசக்தி வென்றுதீரும் என்ற உண்மை
நன்குணர்ந்து நாமும் இன்று ஒன்று கூடுவோம்
பேட்டைதோறும் ஒன்று கூடி நாட்டைப்பற்றி சிந்தைசெய்து
கேட்டைப் போக்கி வலிமையுள்ள நாட்டினைக் காண்போம் - விரைவினில் காண்போம்
(இந்த நாடு)
பாடல் பட்டியல்
இந்த யுகம் ஹிந்து யுகம்
இணையில்லா சங்க யுகம்
எங்களன்னை விழித்தெழுந்தாள்
எங்களன்னை விழித்தெழுந்தாள் (இந்த யுகம் )
அங்கொன்றாய் இங்கொன்றாய்
அரும்பிவிட்ட சங்க சக்தி
எங்கெங்கும் ஆனபடியால்
நகரமெங்கும் வீதியெங்கும்
பேட்டையெங்கும் வளர்ந்ததால்
வேற்றுமை ஒழிந்ததனால்
இந்த யுகம் வந்தது
சங்கம் சக்தி தந்ததால்
இந்த யுகம் ஹிந்து யுகமே (இந்த யுகம் )
துறை தோறும் தேசபக்தி
கொண்டு சென்ற சங்கசக்தி
முதன்மை பெற்று வென்று நின்றதால்
கோயிலெங்கும் பள்ளியெங்கும்
கோட்டை தொழிற்சாலையெங்கும்
புத்தொளி பிறந்ததனால்
இந்த யுகம் வந்தது
சங்கம் சக்தி தந்ததால்
இந்த யுகம் ஹிந்து யுகமே (இந்த யுகம் )
புயல் வெள்ளம் வந்தபோதும்
பெரும் துன்பம் தந்தபோதும்
தாய்மையொடு சங்கம் சென்றதால்
கஷ்டமெல்லாம் போனது
அன்பு ஒன்றே வென்றது
பந்தம் இங்கு உண்மை ஆனதால்
இந்த யுகம் வந்தது
சங்கம் சக்தி தந்ததால்
இந்த யுகம் ஹிந்து யுகமே (இந்த யுகம் )
ஊர்தோறும் ஹிந்துக்களை
சேர்த்திணைத்த சங்கசக்தி
சேவை என்ற வடிவம் பெற்றதால்
சாதி சண்டை போனது
சங்கடங்கள் தீர்ந்தது
சமத்துவம் பிறந்ததனால்
இந்த யுகம் வந்தது
சங்கம் சக்தி தந்ததால்
இந்த யுகம் ஹிந்து யுகமே (இந்த யுகம் )
பாடல் பட்டியல்
இந்தப் புண்ணிய நாடெங்கள் நாடு
இந்த பாரதப் பழம்பெரும் நாடு
இதன் பெருமையை உலகில் உயர்த்த
இணையில்லாத் தியாகம் செய்வோம்
இது ரிஷி முனிவோர்தம் நாடு
ஆன்மீகச் செல்வர்தம் நாடு
இறைப்பணியில் அனைத்து மளித்தே
இன்பத்தில் திளைத்த நாடு
இறைவன் வடிவம் இந்நாடு
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
இது வீரர் தோன்றிய நாடு
வில் விஜயன் வீமன் நாடு
வீரத்தின் நற்பயிர் தழைக்க
செங்குருதியை பாய்ச்சிய நாடு
வீரத்தின் மரபினைக் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
இது ஒருமை நிறைந்த நாடு
ஓருடலாய் அமைந்த நாடு
இது தோன்றிய நாள் முதல் ஒன்றி
பெரும் குடும்பமாகும் நாடு
இந்த நாட்டின் ஒருமையைக் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
தாய் தந்தை குரு இந்நாடு
தாய்ப் பாசம் நிறைந்தோர் நாடு
தாய் நாட்டின் வளத்தினை உயர்த்த
தம் வாழ்வை அளித்தோர் நாடு
தாய் நாட்டுப்பற்றினை வளர்க்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
போகத்தின் பெரும் புயலுடனே
பிற நாட்டின் கருத்து அலையும்
சுயநலமும் பிளவும் இதனை
சுயமறதியில் ஆழ்த்திடும் இன்று
சுயநினைவும் வலிமையும் காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
இதன் அகமும் புறமும் எதிரி
இதன் சுதந்திரம் பறிக்கும் வைரி
இந்த நாட்டினை அடிமையாக்க
சதிகள் பல செய்யும் துரோகி
இந்த நாட்டின் விடுதலை காக்க
இதன் பூஜையில் மலராய் ஆவோம் (இணையில்லாத் ...
பாடல் பட்டியல்
இரவு கழிந்தது இரவி எழுந்தான்
கிருதயுகக் கதிர்தூவிப் புரவி யமர்ந்தான்
வையகமே இனி புதுமைகள் காண்பாய்
பாரத சூரியன் மகிமைகள் காண்பாய்
ஆயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த
ஹிந்து மஹாசக்தி எழுந்தது சீறி
நல்லோரை வாழ்த்திட தீயோரை வீழ்த்திட
போர்க்கோலம் பூண்டு எழுந்தது காண்பாய்
வேதமுழக்கம் ஞான விளக்கம்
நரவுருவில் நடமாடிடும் தெய்வம்
கதையல்ல மிகையல்ல கற்பனையல்ல
கண்ணாரக் காண்பாய் நீ சற்றே பொறுப்பாய்.
ஹனுமனின் பக்தி சீதையின் கற்பு
ராமனின் அறவர சாட்சியும் காண்பாய்
வீமனும் பார்த்தனும் தருமனும் கண்ணனும்
மீண்டும் இந்நாட்டினில் உலவுதல் காண்பாய்
சங்கரன் மேதை வள்ளுவன் கவிதை
சிவராஜன் வாளுமே மின்னிக் கிளம்பும்
ரஜபுத்ரர் வீரம் சோழர் சீராட்சி
பூமண்டலம் வெல்ல திக் விஜயம் செய்யும்
விஞ்ஞான விந்தையும் மெய்ஞ்ஞான மேன்மையும்
இன்பங்கள் கோடி இணைந்த நற்காட்சியும்
வீட்டுக்குப் பூட்டுப் போடாத நல் மாட்சியும்
புதுமைகள் பலவும் நீ விரைவினில் காண்பாய்
பற்பல ஆண்டுகள் மோனத் தவத்தால்
கேசவர் மாதவர் புண்ய பலத்தால்
அந்நியன் தீட்டிய அஞ்சனம் நீங்கி
தன்னை உணர்ந்த நல்பாரதம் காண்பாய்
இரவு கழிந்தது இரவி எழுந்தான்
கிருதயுகக் கதிர் தூவிப் புரவியமர்ந்தான்
வையகமே இனி புதுமைகள் காண்பாய்
பாரத சூரியன் மகிமைகள் காண்பாய்
பாடல் பட்டியல்
இருண்ட காலம் இன்றே முடிந்தது
ஒளிமிகும் நாட்களை வரவேற்போம்
தன்னை எரித்து உயிர்களைக் காக்கும்
சூரிய தேவனைப் போற்றிடுவோம்
ஓய்வும் இன்றி அகந்தையும் இன்றி
பணியைச் செய்பவன் சூரியனே
நாமும் அவனைப் போலவே வாழ்ந்து
நானிலம் உய்ந்திட பணிபுரிவோம்
உடலைப் பிணைத்த அன்னியன் அகன்றான்
உள்ளத்தில் அடிமையை அகற்றிடுவோம்
வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் செயலிலும்
வளர்ப்போம் சுதேசி உணர்வினையே
நவீன கால அறிவியல் வளர்ச்சியில்
ரிஷிமுனி தவபல மிணைத்திடுவோம்
பாரத நாட்டைப் பாரின் தலைமையில்
நாட்டிடுவோம் நாம் விரைவினிலே
இருளிலிருந்து ஒளியை நோக்கி
வெற்றி பாதையில் பாரத நாடு
வேள்வி இதனில் ஆகுதி ஆவோம்
வெற்றியைக் காண்போம் உறுதியிதே!
பாடல் பட்டியல்
இல்லந்தோறும் ராமஜோதி
உள்ளந்தோறும் தேசபக்தி
கொழுந்துவிட்டு எரியச்செய்குவோம்
எழுச்சி பெற்று நிற்கச் செய்குவோம்
கட்டுவோம் கோயில் கட்டுவோம்
ராமர் கோயில் கட்டுவோம்
அயோத்தி ராமர் கோயில் கட்டுவோம்
அதே இடத்தில் கட்டுவோம் கட்டுவோம்
பாபர் எனும் மதவெறியன் பாரதத்தில் படையெடுத்து
ராமர் கோவில் தகர்த்து விட்டான்
அன்று தியாகம் செய்த ஆன்மாக்கள் நற்கதியை அடைவதற்கு
ராமர் கோவில் கட்டி முடிப்போம்
அன்று தியாகம் செய்த ஆன்மாக்கள் நற்கதியை அடைவதற்கு
ராமர் கோவில் கட்டி முடிப்போம்
ஸ்ரீராமர் கோவில் கட்டி முடிப்போம் (2 முறை)
சுயராஜ்யம் பெற்ற பின்பு சுதந்திரமாய் நாமிருக்க
ஸ்ரீராமன் சிறையிருந்தான்
கேட்டை நீக்கி பூட்டுடைக்க கோடிமக்கள் ஆர்த்தெழுந்து
ஆலயத்தின் மணிக்கதவும் திறந்து விட்டோம்
ஆரம்பம் இது இன்று மங்களமாய் முடிவதற்கு
ராமர் கோவில் கட்டி முடிப்போம்
ஸ்ரீராமர் கோவில் கட்டி முடிப்போம் (2 முறை)
கிராமம் கிராமமாக சேர்ந்து ராமநாம கல்லெடுத்து
அயோத்தி நோக்கி அனுப்பி வைத்தோம்
ஆட்சியாளர் எதிர்த்த போதும் அஸ்திவாரம் நாட்டி அன்று
மாட்சி பெற்ற சாதனையை நினைவிற் கொள்வோம்
அன்று போல இன்று நாமும் ஒன்றிணைந்து பாடுபட்டு
ராமர் கோவில் கட்டி முடிப்போம்
ஸ்ரீராமர் கோவில் கட்டி முடிப்போம் (2 முறை)
மாமதுரை நகரினிலே கரசேவை செய்வதற்கு
ஆண்டவனே இறங்கி வந்தான்
பிட்டுக்காக மண்சுமந்து பிரம்படியும் தாங்கி நின்று
புகட்டுகின்ற பாடம் என்ன புரிந்து கொள்வோம்
புறப்படுவோம் அணி அணியாய் காரசேவை செய்வதற்கு
ராமர் கோவில் கட்டி முடிப்போம்
ஸ்ரீராமர் கோவில் கட்டி முடிப்போம் (2 முறை)
ஆக்ரமிக்க வந்தவனை அடிவருடும் கூட்டமொன்று எதிரணியில் நிற்கின்றது
நாட்டு நலன் கருதாமல் ஓட்டு நலன் கருதுவோர் தம்
கூறு போடும் பின்னணியும் புரிகின்றது
பொறுத்ததெல்லாம் போதுமினி
கோதண்டம் கையிலெடு
துரோகியரின் கதை முடிப்போம்
ஸ்ரீ ராமர் கோவில் கையிலெடுப்போம் (2 முறை)
பாடல் பட்டியல்
இன்மலர்ச் சோலையில் இதுவரை திரிந்தோம்
இனிமுள் மீதும் நடை பழகிடுவோம்
மாமலை இமய மகத்துவம் கேளீர்
மாளா உறுதியின் வடிவது பாரீர்
அதோ சமுத்திர சங்கம நாட்டம்
ஸதா விரைந்திடும் நதிநீர் காட்டும்
குறியில் குலையா உறுதியின் முன்னம்
நெறியில் தடைகள் தகர்வது திண்ணம் [இனி முள் மீதும்]
சுயபலக் கவசம் அணிந்திருப்போனை
நயமுடன் இறைவனும் நாடிடு வானே
அன்னியர் தயவினை அண்டுவோர் தம்மை
அன்னியர் ஆக்குவர் தம்கை பொம்மை
வாழ்வின் உண்மை நெறியிது உணர்ந்தே
வாழ்வுப் பாதையில் முன்னேறிடுவோம் [இனி முள் மீதும்]
நம்முடைப் பாய்ச்சல் மின்னலைப் போலே
நம்முடை கர்ஜனை இடியினைப் போலே
நம்முடை பெருமிதம் விண்ணளாவுது
விம்மிடும் கடலலை நம்புகழ் பாடுது
ஆழ்கடல் போலே ஆழ்ந்த அறிவுடன்
சூழிளந் தென்றலின் சுழற்சி கற்றிடுவோம் [இனி முள் மீதும்]
எழுவோம் இன்றே இருள் மயமான
வழிஒளி பெற்றே விளங்கிடச் செய்வோம்
முழு இருள் தன்னை அடியொடு மாய்த்து
எழுகதிர் ஒளியினை ஏற்றிடுவோமே
எமதென எதுவும் இன்றியே இனிநாம்
உமிழொளிச் சுடர்போல் உயர்வது பயில்வோம் [இனி முள் மீதும்]
பாடல் பட்டியல்
இன்னமுதமாம் ராஷ்ட்ரபக்தி
நாடு முழுதும் பரவும் போது
இடர்கள் யாவும் நடுங்கி ஒடும்
நாடு வென்றே வாகைசூடும்.
காரிருள் தன்னைக் கண்டு அஞ்சி
கதிரவனுமே ஒளிவதுண்டோ?
காடு மலைகள் அணைகள் யாவும்
பெருகும் நதியை தடுப்பதுண்டோ?
சாடும் இன்னல் மலை கடந்து
ஏற்ற வழியில் ஏகுவோனை
தேடிவந்தே புகழும் சூழும்
பகைவரெல்லாம் புழுதி ஆவர்
குறியை அடைய முனையும் போது
முள்ளும் கல்லும் மலர்களாகும் (இடர்கள்)
கதிரவன் வழித் தோன்றலானால்
கதிகலங்கி விலகுவோமோ
நதியினின்றும் ஊக்கம் கொண்டால்
தயங்கி வழியில் விலகுவோமோ
நல்வழியில் நிலைத்து நிற்கும்
எம்மை பிறழவைப்பவர் யார்?
சீறும் எரிமலை தனையணைக்கும்
திறன் படைத்தவர் எவருமுண்டோ?
சாவு வரினும் மன மகிழ்ந்தே
ஏகி விட்டோம் வாளை ஏந்தி (இடர்கள்)
புதுமை அறிவுத் துறைகளில் நாம்
நிகரிலா முன்னேற்றம் காண்போம்
பரந்த வானின் புதிர்களெல்லாம்
புதிய வழியில் புரிய வைப்போம்
பிடித்து அலைக்கும் போகப் பேயை
விரட்டித் தியாக உணர்வளிப்போம்
அடிமை வாழ்வாம் இழிவுநீக்கி
இன்ப மழையைப் பொழிய வைப்போம்
கனவு இதனை நனவு ஆக்க
திரண்டு எழுவோம் ஹிந்து மைந்தர் (இடர்கள்)
பாடல் பட்டியல்